கர்ப்பமான 15 வயது சிறுமி! Youtube பார்த்து பிரசவித்த பின் குழந்தையை கொன்ற கொடூரம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 15 வயது மைனர் ஒருவர் யூடியூப் பார்த்து  குழந்தையைப் பெற்றெடுத்தார், பின்னர் அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது குறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நாக்பூரின் அம்பாஜாரி பகுதியைச் சேர்ந்த சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது தாயிடம் கூறி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, பிரசவம் குறித்த … Read more

ஐதராபாத் ஷூட்டிங்கில் அமிதாப்புக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து; வீட்டில் ஓய்வு

மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஐதராபாத்தில் இருந்து மும்பை திரும்பினார். தற்போது அவரது … Read more

இமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத 286 அரசு பள்ளிகள் மூடப்படும்: கல்வி அமைச்சர் தகவல்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத 286 அரசு பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இமாச்சல பிரதேசகல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் சிம்லாவில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது. மாநிலத்தில் மொத்தம் 15,313 அரசு பள்ளிகள் உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.3 ஆயிரம் பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. 455 பள்ளிகள் பதிலாள் (டெபுடேஷன்) ஆசிரியர்கள் மூலம் இயங்குகின்றன. தொடக்கப் பள்ளிகளில் … Read more

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் வயல்வெளியில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர்..!

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் தாய் புலியை பிரிந்து தவித்த 4 புலிக்குட்டிகளை மீட்ட வனத்துறையினர், அவற்றை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளியில் புலிக்குட்டிகள் இருந்ததை பார்த்த விவசாயிகள், அவற்றை நாய்கள் கடித்து இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளதாக கருதி, வீட்டிற்கு கொண்டு வந்து அறையில் பூட்டி வைத்தனர். தகவலறிந்த நந்தியாலா வனத்துறையினர் புலிக்குட்டிகளை மீட்டனர். Source link

கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது ராஜஸ்தானில் 12 தமிழக போலீசார் கைது

அஜ்மீர்: தமிழகத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ரூ.52  லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் பைருகேடாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்வதற்காக திருச்சி போலீஸ் அதிகாரி மோகன் தலைமையிலான தமிழ்நாடு தனிப்படை போலீசார் 12 பேர் ராஜஸ்தானில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க … Read more

ம.பி.யில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்

போபால்: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் முதலமைச்சரின் அன்பு சகோதரி (லாட்லி பெஹனா) திட்டத்தை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது பிறந்தநாள் தினமான நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்குபெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,23,733. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்தது 18 தொகுதிகளில் பெண்வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட அதிகம் உள்ளனர். ம.பி.யில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.79 சதவீதம் அதிகரித்துள்ளது. … Read more

சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.

சுகாதாரத்துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: சுகாதாரத்துறையில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்னெடுப்புகளை, திறமையாக செயல்படுத்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக மத்திய அரசு தொடர்ந்து வெபினார்களை நடத்தி வருகிறது. இதன்படி இன்று (மார்ச்.6) நடைபெற்ற வெபினாரில் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பினை கோவிட் பொதுமுடக்கத்திற்கு முன், பொது முடக்கத்திற்குப் பின் என … Read more

'ராகுல் காந்தியால் அப்பாவாக முடியாது'.. ஏன் தெரியுமா? கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

ராகுல் காந்தியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். கர்நாடக பாஜக தலைவரும், எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரர். தீவிர மதவாதியான இவர் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அண்மையில் இவர் கொப்பல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள் நாங்கள்; அனுமனை வணங்குகிறோம். திப்பு சுல்தானின் சந்ததிகளை வீட்டுக்கு அனுப்புவோம். இந்த … Read more

நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது விலா எலும்பில் காயம்.. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என தகவல்..!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது காயமடைந்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்துவரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், உடல் அசைவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இயல்பு நிலைக்கு திரும்ப … Read more