நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது விலா எலும்பில் காயம்.. இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என தகவல்..!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பின்போது காயமடைந்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்துவரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது மும்பையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், உடல் அசைவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், இயல்பு நிலைக்கு திரும்ப … Read more

புதிய மதுபான கொள்கை வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு..!!

டெல்லி: சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20 வரை மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருந்தது. சிபிஐ கைதையடுத்து டெல்லி துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து … Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மையத்தில்: மத்திய அமைச்சர் மாண்டவியா ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு (2023) நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்தியது. 277 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 902 மையங்களில் 2,08,898 பேர் கணினி மூலம் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை என்பிஇஎம்எஸ் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக விரல்ரேகை பதிவு, சிசிடிவி கண்காணிப்பு, ஆவண சரிபார்ப்பு, செல்போன் ஜாமர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு மையங்களுக்கு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2901 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,544,25 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,64,23,392 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் … Read more

ஏசியாநெட் அலுவலகத்தில் நுழைந்து எஸ்எஃப்ஐ மிரட்டல்: பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியாநெட் செய்தி நிறுவனம், கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவி இருப்பது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதில், 9 வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவன் தனக்கு போதை மருந்து தந்ததாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன் பள்ளியில் படிக்கும் பல மாணவிகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது … Read more

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ சோதனை: என்ன காரணம்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இன்று மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஊழல் வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் 2004 மற்றும் 2009 கால கட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட நிலங்களுக்குப் பதிலாக … Read more

சமையல் எரிவாயு மானியம் படிப்படியாக குறைப்பு…பயனாளிகள் எண்ணிக்கையையும் திடீர் குறைத்தது ஒன்றிய அரசு!!

டெல்லி : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து தற்போது ரூ.1,018ஐ கடந்துள்ள நிலையில், அவற்றிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. 2018-2019ம் ஆண்டில் ரூ.37209 கோடியும் 2019-2020ம் ஆண்டில் ரூ.24,172 கோடியும் 2020-2021ம் ஆண்டில் 11,896 கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக குறைந்து கொண்டே வந்த மானியத் தொகை அடுத்த நிதியாண்டில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டில் வெறும் ரூ.1,811 கோடி … Read more

நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு – எதிர்க்கட்சி இல்லா ஆட்சி உருவாகிறது

கோஹிமா: நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் என்டிபிபி – பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அங்கு எதிர்கட்சிகள் இல்லாத ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப். 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் மார்ச் மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்தில் முந்தைய கூட்டணியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. … Read more

கர்நாடக தேர்தல் 2023: மீண்டும் எடியூரப்பா… டெல்லி வியூகத்தால் கடுப்பான சீனியர்கள்!

தென்னிந்தியாவில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் கர்நாடகா. குறிப்பாக இந்த மண்டலத்தில் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கும் ஒரே மாநிலம். எனவே ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக பாஜகவை பொறுத்தவரை செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. நான்கு முறை முதல்வர். மூன்று முறை எதிர்க்கட்சி தலைவர். எடியூரப்பாவிற்கு முக்கியத்துவம் இவருக்கு லிங்காயத் சமூக வாக்கு வங்கி பலமூட்டும் வகையில் காணப்படுகிறது. … Read more

பாட்னாவில் உள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.!

பாட்னா: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வந்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கில் முன்னாள் … Read more