”உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கெல்லாம்…” – மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான் இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி?” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது, மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடுவதை போல இருப்பதாகவும், மோடி என்ற சமூகத்தினரை அவமதிப்பதாகவும் சொல்லி குஜராத்தின் முன்னாள் பாஜக அமைச்சரும் எம்.எல்.ஏவுமான … Read more

பாஜக அரசுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?- அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சு முத்துசாமி, “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு … Read more

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி: தகுதி நீக்கத்திற்கு பின் முதன்முறை

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் அவர், வயநாடு எம்.பி. பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் … Read more

அகமதாபாத், சூரத் ,ராஜ்கோட் உள்பட 17 சிறைகளில் 1700க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை..!

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், ராஜ்கோட் ,சூரத் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மத்திய சிறைச்சாலைகளில் போலீசார் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை அதிரடியாக சோதனைகளை நடத்தினர். சுமார் 17 சிறைச்சாலைகளில் 1700க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சிறைக்குள் சட்டவிரோதக் காரியங்களைத் தடுக்க இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறையில் கைதிகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்கின்றனவா என்றும் இந்த சோதனை மூலம் … Read more

இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!

டெல்லி: ராகுல் காந்திக்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வரை பலரும் நீதிமன்ற தண்டனைக்கு பின் தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கி பதவியை இழந்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததால் கேரளா வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளி என … Read more

பாஜக ஒரு குரலை மவுனமாக்க நினைத்தது; ஆனால்… வெளிநாட்டு ஊடகங்களை சுட்டிக்காட்டி சசி தரூர் கருத்து

புதுடெல்லி: பாஜக ஒரு குரலை மவுனமாக்க நினைத்தது. ஆனால் இன்று உலகின் ஒவ்வொரு மூலையும் இந்தியாவின் குரல் கேட்கிறது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அவர்கள் ஒரு குரலை ஒடுக்க நினைத்தார்கள். இப்போது உலகின் ஒவ்வொரு மூலையும் இந்தியாவின் குரலைக் கேட்கிறது” … Read more

ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள நபரிடம் போலீஸார் விசாரணை

புதுச்சேரியில், கடன் வாங்கித் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள சிவகங்கையை சேர்ந்த நபர் மேலும் பலரிடம் போலியான காசோலைகளை கொடுத்து பல லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், தனது நிலத்தை அடமானமாக வைத்து 10 கோடி ரூபாய் கடன் பெற முயன்றதை அறிந்த சென்னையில் வசித்துவரும் காளிதாஸ், போலியான காசோலை தயாரித்து, அதற்கான கமிஷன் தொகையாக 33 லட்சத்து … Read more

மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை

போபால்: மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சி புரியும் பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர்கள் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன கருத்துக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலிய நகரில் நடைபெற்ற … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து..!!

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை. இதனிடையே இன்று மக்களவை செயலாளர், ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் எம்பி … Read more

ராகுல் காந்தி தகுதிநீக்கம் | இடைத்தேர்தலை அறிவிக்குமா தேர்தல் ஆணையம்; நிபுணர்கள் சொல்வதென்ன?

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி … Read more