வங்கி நிதி மோசடியில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: சிக்கிலாம் டிரேட் ஹவுஸ் நிறுவனம் போலியான ஆவணங்களை காண்பித்து, எஸ்பிஐ வங்கியில்ரூ.2 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வந்தது.  கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், சிக்கிலாம் நிறுவனத்தின் 2 ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்ரூ.50,000 … Read more

செல்பி விவகாரம் பிருத்வி ஷா மீது நடிகை பாலியல் புகார்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது நடிகை சப்னா கில் மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். செல்பி விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சமூக வலைத்தள பிரபலமும் நடிகையுமான சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சப்னா கில், அவரது நண்பர்கள் ஷோபித் தாக்கூர், ஆஷிஷ் யாதவ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கோரி விண்ணப்பித்ததைத் … Read more

நடிகர் ஷாருக்கானின் பதான் படம்ரூ.1000 கோடி வசூல்

புதுடெல்லி: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிவரும் பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘‘பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும்  நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் … Read more

இந்தியா-சிங்கப்பூர் இடையே யுபிஐ-பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா -சிங்கப்பூர் இடையே யுபிஐ -பேநவ் இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுங் ஆகியோர் வீடியோகான்பரன்சிங் மூலமாக நேற்று தொடங்கி வைத்தனர். இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘மிக விரைவில் இந்தியாவின் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனைகள், பண பரிவர்த்தனையை காட்டிலும் அதிகரித்துவிடும். யுபிஐ    பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கின்றது” என்றார். இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘யுபிஐ கட்டண முறைகளின் … Read more

யூபிளக்ஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பேக்கேஜிங்  நிறுவனமான யூப்ளக்ஸ் உடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். டெல்லி, நொய்டா, ஜம்மு காஷ்மீர், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா உட்பட நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், அவற்றுடன் தொடர்புடைய சுமார் 70 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக நிறுவனம் எந்த விளக்கமும் தரவில்லை.

சொன்ன சம்பளத்தில் பாதிதான்! மெயில் அனுப்பிய ’விப்ரோ’ நிறுவனம்.. கலக்கத்தில் பிர‌ஷர்கள்!

புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளது விப்ரோ நிறுவனம். கொரோனா தொற்று சமயத்தில் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என வரிசையாகப் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கொத்துகொத்தாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன. இச்சூழலில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஆட்குறைப்பு செய்த நிலையில், தற்போது ஊழியர்களின் … Read more

தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள்: அமித்ஷா

டெல்லி: தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச … Read more

இந்தியாவின் UPI-உடன் சிங்கப்பூரின் "பே நவ்" ஒப்பந்தம் – காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி

இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் “பே நவ்” நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பை அறிவிக்கும் நிகழ்ச்சியில் இன்று காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை நடத்தி, இணைப்பை தொடங்கி வைத்தனர். எல்லை தாண்டிய யூபிஐ வசதி மூலம் ஒரு … Read more

இத்தன பேரோட காதலா…! முகநூலில் அடித்துக் கொண்ட அழகான ஆபீசர்ஸ் மாற்றம்..! குழாயடி சண்டையால் நடவடிக்கை

முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். சசிகலா பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாக புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா. தற்போது கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த ரூபா ஐபிஎஸ், அங்கு அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த 39 வயதான ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் … Read more

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் … Read more