12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது விசாரணை – மாநிலங்களவை தலைவர் உத்தரவு
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு சமீபத்தில் முடிந்தது. இதில் அதானி குழுமம் மீதான புகார் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், மாநிலங்களவை செயலகம் சார்பில் பிப்ரவரி 18-ம் தேதியிட்டு வெளியான செய்தி அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவை மரபு மற்றும் விதிகளை மீறி அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். அவைத் தலைவரின் உத்தரவை … Read more