அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்தது. ஜூலை 11ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று ஓபிஎஸ் தரப்பினர் ஆவணங்களை எடுத்து சென்று விட்டனர் என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் – அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அண்மையில், விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது ஏர் இந்தியா. ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் கல் இருந்ததாக பெண் பயணி ஒருவர் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஏர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தை ‘டேக்’ செய்து … Read more

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

டெல்லி: ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பணம், பரிச்ப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆ.ர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையின் போது இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும், தமிழக அரசின் கருத்தை … Read more

மெட்ரோ ரயில்பாதை பணியின்போது 40அடி உயர இரும்பு தூண் விழுந்து தாய், 2 வயது மகன் பலி

பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணியின்போது, திடீரென இரும்புத் தூண் இடிந்து சாலையில் விழுந்ததில், தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழந்தனர். மேலும் தந்தை மற்றும் 2 வயது மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள நாகவராப் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை ஹென்னூர் சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் … Read more

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் இறந்த வழக்கில் 6 பேருக்கு 14 நாள் காவல்

புதுடெல்லி: வடமேற்கு டெல்லி, கஞ்சவாலா பகுதியில் கடந்த ஜனவரி 1-ம் தேதி அதிகாலை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண் மீது கார் மோதியது. இதில் அப்பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் பல கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள்: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), கிருஷ்ணன் (27), மிதுன் (26), … Read more

யார் உண்மையான சிவசேனா? என்பது தொடர்பான வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் – உச்சநீதிமன்றம்..!

உண்மையான சிவசேனா யார்? என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்ரே ஆட்சி மீது அதிருப்தியடைந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், பாஜகவுடன் இணைந்து, மகாராஷ்டிர முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, ஷிண்டே பதவியேற்றது மற்றும் சபாநாயகர் நியமனம் தொடர்பாகவும் ஆளுநர் எடுத்த முடிவு மற்றும் தாக்கரே தரப்பு எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய உள்ள பிரச்சனைகள் தொடர்பாக, தாக்கல் … Read more

இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை

கனடா: இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் பொது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீது கனடா குற்றசாட்டு வைத்துள்ளது. இலங்கை ராணுவ படை பிரிவு அதிகாரி சுனில் ரத்நாயக்க, கடற்படை புலனாய்வு அதிகாரி சந்திரபிரசாத் ஹெட்டியாராச்சிக்கும், கனடாவில் உள்ள ராஜபக்சே சகோதர்கள் உள்பட தடைவிதிக்கப்பட்ட 4 பேரின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜோஷிமத் பேரிடர் | ’‘எல்லா அவசர பிரச்சினைகளுக்கும் உச்ச நீதிமன்றம் மூலமே தீர்வு காண வேண்டியதில்லை” – தலைமை நீதிபதி

புதுடெல்லி: “நாட்டின் ஒவ்வொரு அவசரப் பிரச்சினையும் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது இல்லை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு வெடிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவினை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு இன்று பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்/சந்திரசூட், … Read more

விண்வெளித்துறையில் இஸ்ரோ சிறப்பான பணிகளை செய்து வருவதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு..!

இங்கிலாந்து விண்வெளி அமைப்பு ஏவிய ராக்கெட் தோல்வியடைந்த நிலையில்,விண்வெளித் துறையில் இஸ்ரோ ஆற்றும் பணிகளை மேற்கோள்காட்டி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து முதன்முதலாக ஏவப்பட்ட ராக்கெட், கடைசி நேரத்தில் திசை மாறி. புவி வட்டப்பாதையில் இருந்து விலகிச்சென்றதாகவும், இதனால் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த விண்வெளிப்பயணம் முற்றிலும் வேறுபட்டது என்றாலும், இஸ்ரோவின் ஏவுதல் சாதனைகளை நாம் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும் என டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். … Read more

திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு

திருமலை: திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. மேலும், நாளை மறுதினம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வருகிற 11ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ₹300 நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான 2 லட்சம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் ஏற்கனவே விநியோகித்தது. இதுதவிர நாளொன்றுக்கு 45 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் … Read more