காதல் விவகாரம்.. தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் வஸ்மிதா (21). ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து விட்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வஸ்மிதா வீட்டின் அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த முருகன் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் … Read more

மோடி குறித்த பிபிசி ஆவணப்படத் தடைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா – மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்தக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானா அமர்வு முன்பு, வழக்கறிஞர் பிஎல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர் பிபிசி ஆவணப்படத் தடைக்கு எதிரான தங்களது பொதுநல மனுக்களை … Read more

நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மத்திய பாஜக ஆட்சிக்கு பிறகு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி … Read more

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு கூட்டம் தொடங்கியது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ராகுல், உமர் அப்துல்லா, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

'மோடி அரசின் திசைதிருப்பும் உத்தி' – வெளியுறவு அமைச்சர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் லடாக்கில் சீன ஊடுருவலை தடுக்க மோடி அரசு மேற்கொண்ட உத்திகளை சுருக்கமாக, மறுத்தல், திருப்புதல், பொய்யுரைத்தல், நியாயப்படுத்துதல் எனக் கூறலாம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சீன விவகாரம் குறித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடியாக இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன்பாக, அரசியல் காரணங்களுக்காக சிலர் 1962ம் ஆண்டு சீனா கைப்பற்றிய நிலத்தினை தற்போது … Read more

முகலாயர் தோட்டம் பெயர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்!

குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்கள் ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடி வருவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முகலாயர் தோட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்றைய தினம் … Read more

டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று பகல் 12 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை இக்கூட்டத்தில் மத்திய அரசு கோர உள்ளது. இதைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.இதில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வியூகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. Source link

ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் ராகுல் காந்தி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

'என்னை இந்து என்று அழைக்கவும்': கேரள ஆளுநர் விருப்பம்

திருவனந்தபுரம்: என்னை இந்து என்று அழைப் பதையே பெரிதும் விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் அவர் இதுகுறித்து மேலும் பேசியது. இந்து என்று கூறுவது தவறு என்று உணரும் வகையில் மாநிலத்தில் சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான்ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவேதான் ஒரு இந்து என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். தற்போது அதனை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியு சூழல் … Read more

பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இதனிடையே, பிரதமர் மோடி தொடர்பாக யூ-டியூபில் வெளியான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more