மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அமிஷா உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். புதுடெல்லி, மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன் … Read more

இன்றுடன் நிறைவடைகிறது ராகுல் காந்தியின் நடைபயணம் – நிறைவு விழாவில் 12 கட்சிகள் பங்கேற்பு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று  முடிவடையும் இந்நிகழ்வையொட்டி, அங்கு உள்ள லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் ராகுல். தொடர்ந்து இன்று நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவின் நிறைவு விழாவில் 12 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியில் `இந்திய ஒற்றுமை யாத்திரை, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நாட்டின் தெற்கு முனையான கன்னியாகுமரியில் தொடங்கி … Read more

மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை… விமான எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி!!

இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாக்பூர் – மும்பை இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்ததாக பைலட்டுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பயணிக்கு உரிய முறையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவசரகால கதவை சேதப்படுத்தியதற்காக அந்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் இந்த … Read more

திறப்பு விழாவுக்கு வந்தபோது விபரீதம்; காவலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒடிசா அமைச்சர் உயிரிழப்பு: உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் குண்டு பாய்ந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர். இவர் பிரஜ்ராஜ்நகர் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான புதிய அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக நேற்று காரில் வந்து இறங்கினார். அப்போது அருகில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சரின் … Read more

சொத்து தகராறு காரணமாக தன்னை ஒருவாரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக பிரெஞ்சு நடிகை புகார்!

சொத்து தகராறு காரணமாக தன்னை ஒருவாரம் கோவாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக 75 வயதான பிரெஞ்சு மூத்த நடிகை மாரியான் போர்கோ புகார் அளித்துள்ளார்.  கோவாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சொத்துக்கு இருதரப்பினர் உரிமை கோரி வருகின்றனர். இதில் ஒருவர் பிரெஞ்சு நடிகை மாரியான் போர்கோ ஆவார். இன்னொருவர் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஆவார். காவல்துறையினர் அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அடைத்து வைக்கப்பட்டதாக பிரெஞ்ச் நடிகை கூறும் புகாரை காவல்துறையினர் மறுத்துள்ளனர். பிரெஞ்ச் … Read more

ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக தேர்வுகள் பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என காஷ்மீர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாக புறப்பட்டது.

திருடனின் கடிதத்தால் மனம் இறங்கிய கடை உரிமையாளர்..! அப்படி என்ன எழுதி இருக்கான் தெரியுமா ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் வசித்து வருபவர் கோமாராம். இவர்அதே ஊரில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி வழக்கம் போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் கடை கல்லாவில் பணம் களவு சென்றதை பார்த்தும் திருட்டு நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டார். அப்போது அங்கு ஒரு கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் … Read more

2000 சதுர கி.மீ., சீன ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் அமைதி காக்கும் இந்தியாவின் போக்கு ஆபத்தானது: ராகுல் காந்தி

ஜம்மு: இந்திய மண்ணில் சீனர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல் இருப்பதுபோல் அமைதி காப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சீன ராணுவம் இதுவரை இந்தியாவிலிருந்து 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய அரசோ சீனா நம்மிடமிருந்து எதையுமே … Read more

நாளை கூடுகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்.. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை 2 அமர்வுகளாக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் மத்திய … Read more

மோசமான வானிலை காரணமாக டெல்லி-அகமதாபாத் விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது

ஜெய்ப்பூர்: மோசமான வானிலை காரணமாக டெல்லி-அகமதாபாத் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காலை 9.10 மணிக்கு ஏர் விஸ்தாரா விமானம் தரையிறங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.