2-1 என தொடரை வென்றது இந்தியா பேட்டிங் எவ்வளவு எளிது என சூர்யாவின் அதிரடி காட்டுகிறது: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு

ராஜ்கோட்: இந்தியா -இலங்கை  கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வதுபோட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு ராஜ்கோட்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் இந்தியா  5விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் நாட் அவுட்டாக 51 பந்தில், 7பவுண்டரி,9 சிக்சருடன் 112ரன் விளாசினார்.  சுப்மான்கில் 46(36பந்து),ராகுல்திரிபாதி 35(16பந்து), … Read more

”புதுவை மக்களுக்கு பாரபட்சம் காட்டியதில்லை”-ஏனாம் தொகுதி பிரச்னை குறித்து தமிழிசை விளக்கம்

புதுச்சேரி மக்களுக்கு தாங்கள் பாரபட்சம் காட்டியதில்லை என்றும் ஏனாம் சென்றுள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரச்னையை நேரில் பேசி தீர்ப்பார் என்றும் ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் சித்த மருத்துவ தினத்தையொட்டி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடைப்பயணம் மற்றும் சித்த மருத்துவக் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, … Read more

மக்கள் தொகை கட்டுப்பாடு; பீகார் முதல்வர் சர்ச்சை கருத்து.!

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான … Read more

பலாத்கார இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி: டெல்லியில் அதிர்ச்சி

புதுடெல்லி: டெல்லியில் தன்னை பலாத்காரம் செய்த இளைஞரின் தாயை சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியின் சுபாஷ் மோஹால் பகுதியை சேர்ந்த குர்ஷிதா (50) என்பவர், அதேபகுதியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அந்த கடைக்கு வடக்கு கோண்டா என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வந்தார். அப்போது திடீரென அந்த சிறுமி தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் குர்ஷிதாவை நோக்கி … Read more

காஷ்மீர் | ஜன.1 தீவிரவாதிகள் தாக்குதல்: உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

ஜம்மு: காஷ்மீரில் கடந்த வாரம் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் ஜனவரி 1 அன்று ரஜோரி நகரின் புறநகரில் உள்ள டாங்ரி பகுதியில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேர் ராஜவ்ரியிலிருந்து விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஜம்முவின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more

ஜோஷிமத் நிலச்சரிவு..உயர்நிலை ஆய்வு கூட்டம்..பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை … Read more

இமாச்சல பிரதேசத்தில் 7 அமைச்சர்கள் பதவியேற்பு: முன்னாள் முதல்வர் மகனுக்கும் வாய்ப்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் முன்னாள் முதல்வர் மகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு முதல்வராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அமைச்சரவையில் யார் யார்? சேர்ப்பது என்பது குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்ந்து … Read more

கர்நாடகா: கோவிலில் தலித் பெண்ணை தாக்கிய நபர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கோவிலில் நுழைந்த தலித் பெண் ஒருவரை அறங்காவலர் ஒருவர் கடுமையாக தாக்கி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள அமிர்தல்லி பகுதியில் உள்ள லஷ்மி நரசிம்ம கோவிலுக்கு டிசம்பர் 21 ஆம் தேதி தலித் பெண் ஒருவர் வழிபாட்டுக்காக சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலின் அறங்காவலர் முனிகிருஷ்ணாவுக்கும், பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உள்ளே நுழைந்த பெண்ணை பலமாக … Read more

ராமர் கோவிலை தகர்த்துவிட்டு மசூதி; அல் கொய்தா மிரட்டல்; பாஜ அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரூ.1800 கோடி மதிப்பில் தயாராகும் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமான பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, … Read more

மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஆற்றில் அமுக்கி கணவர் கொடூரக் கொலை: காதலனுடன் மனைவி வெறிச்செயல்

காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வரதய்யபாளையம் பாண்டூர் பகுதியில் உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீசிட்டி போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு: சடலமாக கிடந்தவர் நெல்லூர் மாவட்டம் கொலகமுடி கிராமத்தை சேர்ந்த வெங்கையா (40). … Read more