நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! ஆயுளைக் குறைக்கும் இந்த ‘தவறுகளை’ செய்ய வேண்டாம்!

நியூடெல்லி: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பரிந்துரைகளில் தற்போது முக்கியமான ஒன்று சேர்ந்துவிட்டது. நீரிழிவு நோய் குறித்த ஆய்வுகளின் முடிவுகளே, மருந்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையாகிறது. நீரிழிவு நோயாளிகள் செய்யும் சில தவறுகள், கல்லீரல் பாதிப்படைய வழிவகுக்கும் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவது கல்லீரலுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். கல்லீரல் என்பது நமது முழு உடலின் செயல்பாடும் இணைக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் பழனிசாமி

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதத்தை எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டநிலையில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளார்.

மான் வேட்டையாடிய மலையப்பசாமி – திருப்பதி மலையில் நடைபெற்ற வேடுபரி உற்சவம்

காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பதி மலையில் வேடுபரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காணும் பொங்கல் அன்று திருப்பதி மலையில் பாரிவேட்டை என்ற பெயரில் வேடுபரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கல் நாளான நேற்று வேடுபரி உற்சவம் திருப்பதி மலையில் நடைபெற்றது. வேடுபரி உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச ஆயுதங்களை தரித்து உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டார். அவருடன் கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் எழுந்தருளி புறப்பட்டார். ஏழுமலையான் கோவிலில் இருந்து சுமார் ஐந்து … Read more

இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது

கொல்கத்தா: இந்தியாவின் மிகப் பழைமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா அருகே பெர்ஹாம்பூர் அமைந்துள்ளது. அங்கு பெர்ஹாம்பூர் பேங்க் லிமிடெட் என்ற பெயரில் தனியார் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வங்கியை மூட கடந்த 1951-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வங்கி நிர்வாகம் சார்பில் அதே ஆண்டில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வங்கி நிர்வாகத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மிக … Read more

 கொலீஜியத்தில் அரசின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: கொலீஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதி இடம் பெற வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன விஷயத்தில் ஒன்றிய அரசுக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய … Read more

மத மாற்றம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு: பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மத மாற்றம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒன்றிய அரசின் தலைமை … Read more

அயோத்தி ராமர் கோயில் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Source link

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு தேர்தல் வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் தற்போதையை விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் … Read more

புதுச்சேரி: திருவள்ளுவர் தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை – 7 பேர்மீது கலால் துறை வழக்கு

திருவள்ளுவர் தினத்தில் புதுச்சேரியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர் மீது கலால் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 44 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்து ரூ. 55 ஆயிரம் அபராதம் விதித்தனர். நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானம், சாராய மற்றும் கள்ளு கடைகளை ஒருநாள் மூட கலால் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா, கள்ளதனமாக மதுபானங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை … Read more

புரி ஜெகந்நாதர் கோயிலில் எலித்தொல்லை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே புரி நகரில் அமைந்துள்ளது ஜெகந்நாதர் கோயில். இங்கு எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அதனால் மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுஎன்றும் சேவார்த்திகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சத்யநாரா யணன் புஷ்பலக் என்ற சேவார்த்தி கூறியதாவது: மூலவர் சிலைகளுக்கு ஆபத்து கர்ப்பக்கிரகத்தில் உள்ள ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை சிலைகள் மரத்தால் ஆனவை. சமீப காலமாக கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக எலிகள் வந்து கொண்டிருக்கின்றன. சுவாமி சிலைகளுக்கு உடுத்தும் ஆடைகளையும், பூமாலைகளையும் எலிகள் … Read more