Viral Video : தனது பைக்கில் ஏற மறுத்த ஏரியா பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்

Gurugram Viral Video : நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று பொதுவாக சொல்வதை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது என கூற வேண்டும். குறிப்பாக, அவை அனைத்தும் பெண்கள் மேல் ஆண்கள் தொடுக்கும் வன்முறையை பொதுசமூகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது.  சில மாதங்களுக்கு முன் நடத்திய டெல்லி ஷ்ரத்தா சம்பவம் முதல் புத்தாண்டில், டெல்லி அருகே பல கி.மீ.,கள் காருக்கு அடியிலேயே இழுத்துச்செல்லப்பட்ட பெண் என்ற வரையில்,  அவர்கள் … Read more

பயிற்சி விமானம் கோயில் மீது மோதி விமானி பலி

போபால்: மத்தியப்பிரதேசத்தில் கோயில் மீது விமானம் மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் தனியார் விமான பயிற்சி மையத்தை சேர்ந்த விமானம் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதில் விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இரண்டு பேர் இருந்தனர். இந்நிலையில் இரவு 11.30மணியளவில் விமானத்தை தரையிறக்குவதற்கு விமானி முயற்சித்துள்ளார். அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விமானம் அருகில் இருந்த கோயில் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த பாட்னாவை … Read more

மகர சங்கராந்தியை முன்னிட்டு நைலான் மாஞ்சா கயிறு விற்பவர்கள் மீது நடவடிக்கை

லத்தூர்: மகர சங்கராந்தி விழா வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமானோர் ‘காற்றாடி’ பறக்கவிடுவது வழக்கம். சிலர் காற்றாடி பறக்கவிடுவதற்கு நைலான் மாஞ்சா பயன்படுத்துவர். இது பறவைகள், விலங்குகள் மற்றும் வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் நைலான் மாஞ்சா பயன்படுத்துவற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதையும் மீறி சிலர் நைலான் மாஞ்சா விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு போலீஸ் படை மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

 சபரிமலை வெடி விபத்தில் காயமடைந்தவர் பலி

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கேரளாவில் பெரும்பாலான கோயில்களில் இந்த வெடி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்த திறன் கொண்ட வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது. சபரிமலையில் மாளிகைப்புரம் பகுதியிலும், நடைப்பந்தல் அருகேயும் வெடி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2ம்தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் வெடிபொருள் நிரப்பும்பணியில் … Read more

தலைமை செயலர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். கடந்த ஜூன் மாதம் இமாச்சல பிரதேசத்தில் தலைமைச் செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களின் 3 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதலாவது தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து … Read more

ஐநா அமைதி படையில் இந்திய ராணுவ வீராங்கனைகள்

புதுடெல்லி:  ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்பது குறித்து பெருமை கொள்வதாக பிரதமர் ேமாடி தெரிவித்துள்ளார். சூடானின் அபெய் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் முழுவதும் பெண் வீராங்கனைகளை கொண்ட இந்திய அமைதி படையினர் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்: இந்திய ராணுவம் அதன் மிகப்பெரிய பெண் வீரர்கள் அடங்கிய அமைதி காக்கும் படையினரை அபெயில் … Read more

டெல்லி மாநகராட்சி முதல் கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜ கவுன்சிலர்கள் அடிதடி

புதுடெல்லி: நேற்று கூடிய டெல்லி  மாநகராட்சியின் முதல் கூட்டத்தில்,  ஆம் ஆத்மி மற்றும் பாஜ  கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதையடுத்து, மேயர்,  துணைமேயர் தேர்தல் நடக்கவில்லை. டெல்லி  மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4ம் தேதி நடந்த தேர்தலில் 134 வார்டுகளில் ஆம்  ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜவின் 15 ஆண்டுகால தொடர்  ஆட்சிக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது. பாஜ 104 வார்டுகளில் வெற்றி  பெற்றது. இந்நிலையில்,  ஜனவரி … Read more

உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்து வந்த தலைமை நீதிபதி: நீதிபதிகள் அறை, வாதிடும் இடத்தை பார்த்தனர்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று தனது 2 மகள்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 9ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு பிரியங்கா (20), மஹி (16) என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு திடீரென தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு அவர் உச்ச நீதிமன்றம் வந்தார். அங்கு தான் பணி செய்யும் தலைமை நீதிபதி … Read more

வடமாநிலங்களில் கடும் குளிர்; பனிமூட்டம் – கான்பூரில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி/ கான்பூர்: வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். டெல்லி அயா நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸாகவும், சப்தர்ஜங் பகுதியில் 4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. அதேபோல, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, உறைநிலைப் புள்ளிகளுக்கு அருகில் இருந்தது. வானிலை … Read more

மோடி ஆட்சியில் இரண்டு இந்தியா: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பானிபட்: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் ஏழை, பணக்காரர்கள் என இரண்டு இந்தியா இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானா மாநிலம் பானிபட்டில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மோடி தலைமையிலான ஆட்சியில் இரண்டு இந்தியா உள்ளது.  அதில், ஒன்றில்  தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையில்லா இளைஞர்கள் உள்ளனர். இன்னொன்றில் நாட்டின் பாதி வளத்தை வைத்துள்ள 100 … Read more