பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை!….

இந்தியாவில் முதல் முறையாக பாசுமதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகை என்றால் அது பாசுமதி அரிசி தான். அந்த வகை அரிசி இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான, மணமுள்ள அரிசி மட்டுமே ஒரிஜினல் பாசுமதி அரிசி. ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, … Read more

‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ 3-வது மாநாடு – திருச்சி சமூக சேவை அமைப்பான கிராமாலயா நடத்தியது

புதுடெல்லி: ‘மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா’ (எம்எச்எம்) 3-வது உச்சி மாநாடு, டெல்லியில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாடு திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சமூக சேவை அமைப்பான ‘கிராமாலயா’ சார்பில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் உள்ள குடும்பங்களிலும் வெளியிலும் பேசத் தயங்கும் விஷயமாக மாதவிடாய் உள்ளது. பெண்களின் உடல்ரீதியிலான இந்த இயற்கை உபாதையில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கவனம் இன்றி அவதிக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உகந்த சானிடரி … Read more

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிப்ரவரி முதல் வாரம் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இந்த விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு … Read more

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு அமித்ஷா இன்று பயணம்..!

டோங்கிரி: பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஜம்முவின் டோங்கிரி கிராமத்திற்கு அமித்ஷா இன்று பயணம் மேற்கொள்கிறார். ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் டோங்கிரி கிராமத்திற்குள் கடந்த 1ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த வீட்டின் அருகே தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனால், டோங்கிரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் … Read more

`இயற்கை நறுமணம் கொண்ட பாசுமதி அரிசி மட்டுமே அங்கீகரிக்கப்படும்’- அரசாணை சொல்வதென்ன?

நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரிசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் விவரிக்கப்பட்டுள்ள விதிகளின்படி, “இயற்கை நறுமணம் கொண்ட பாசுமதி அரிசி மட்டுமே அங்கீகரிக்கப்படும். செயற்கை நிறமூட்டுதல், ரசாயனங்களை பயன்படுத்தி பாலிஷ் செய்தல், செயற்கையாக மணமூட்டுதல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. மேலும் பாசுமதி அரிசியின் சராசரி அளவு, அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச ஈரப்பதம் … Read more

பிரதமரின் தெலுங்கானா சுற்றுப்பயணம் திடீர் ரத்து..!!

பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயிலின் தொடக்க விழா மற்றும் ரூ.7 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, செகந்திராபாத் விசாகப்பட்டினம் இடையேயான வந்தே பாரத் ரெயில் போக்குவரத்து சேவையை தொடக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. செகந்திராபாத், மகபூப் நகர் இடையே 85 கி.மீ. தொலைவிற்கு இரட்டை ரெயில் பாதை திட்டம், ஐதராபாத் ஐ.ஐ.டி … Read more

நிலவெடிப்பு, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் நகர மக்கள் மறுகுடியமர்த்தப்படுவர் – உத்தராகண்ட் அரசு உறுதி

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில மாதங்களாக நிலவெடிப்பு, நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக அந்த நகரில் உள்ள கோயில்கள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு கட்டிடங்கள் மண்ணில் புதைந்து வருகின்றன. அந்த நகரின் சுமார் 800 கட்டிடங்கள் வாழத் தகுதியற்றவை என்றுகண்டறியப்பட்டுள்ளன. இந்த சூழலில் முதல்கட்டமாக ஜோஷிமத் நகரில் செயல்படும் 2 ஓட்டல்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம், போலீஸ், தேசிய … Read more

பான் கார்டை ஒற்றை வணிக ஐ.டி.யாகப் பயன்படுத்தும் சட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்..!

பான் கார்டை ஒற்றை வணிக ஐடியாகப் பயன்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு ஐடிகள் உள்ளன. இதில் நிரந்தர கணக்கு எண்ணை அனைத்து செயல்முறைகளுக்கும் பிரத்யேக தொழில் அடையாளமாக மாற்றுவதற்கான சட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்களது பான் கார்டை தற்போதுள்ள வேறு ஏதேனும் அடையாளங்களுடன் இணைக்க அனுமதிக்கும் விதியை இச்சட்டம் உள்ளடக்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.   … Read more

டெல்லியில் பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து விமான சேவை பாதிப்பு

டெல்லி: பனிமூட்டம் காரணமாக டெல்லியில் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் அவதிபட்டு வருகின்றனர். பனிமூட்டத்தால் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 60 விமானங்கள் டெல்லிக்கு தாமதமாக வந்திறங்கின. டெல்லியில் பனிமூட்டத்தால் 22 சர்வதேச விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சுவாமி விவேகானந்தருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: சுவாமி விவேகானந்தரின் 160-வதுபிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “விவேகானந்தரின் சிறந்த லட்சியங்களும் கருத்துகளும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும். அவரது வாழ்க்கை, தேசபக்தி, ஆன்மீகம், அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் நமக்கு ஊக்கமளிக்கும்” என்று கூறியுள்ளார். விவேகானந்தர் தன்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி கர்நாடகாவில் தேசிய இளைஞர் விழாவையும் அவர் நேற்று தொடங்கி வைத்தார். … Read more