எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் (ஊரக) எஸ்எஸ்பி ஸ்வபன் சர்மா நேற்று கூறியதாவது: கடந்த 21-ம் தேதி இரவு பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் ட்ரோன் நுழைய முயன்றதைப் பார்த்த போலீஸார் பிஎஸ்எப் வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும் அதிலிருந்த 5 கிலோ ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு சர்மா கூறினார். சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன், அமெரிக்கா மற்றும் சீனாவின் உதிரி பாகங்களைக் … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகராறு – இறக்கிவிடப்பட்ட பயணிகள்

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர். ஹைதராபாத் புறப்படவிருந்த அந்த விமானத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவர், விமானப் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள், பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை … Read more

ஷாருக்கானை பற்றி அதிகம் தெரியாது: அசாம் முதல்வர் விளக்கம்

கவுகாத்தி: நேற்று முன்தினம் `ஷாருக்கான் யார்?’ என கேட்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, `நேற்று அதிகாலை 2 மணிக்கு எஸ்ஆர்கே. போனில் தொடர்பு கொண்டு பேசினார்,’ என்று கூறியிருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, “அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஜிஜேந்திரா படங்களை பார்த்துள்ளேன். இப்போது வரை ஷாருக்கானை பற்றி அதிகம் தெரியாது. கடந்த 2001ம் ஆண்டு … Read more

பெண் ஊழியர்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் வகையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய ஊயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது, அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு முறை ஊதிய உயர்வும், … Read more

நாளை மறுநாள் மூக்கு வழியாக செலுத்தப்படும் இன்கோவாக் தடுப்பூசி அறிமுகம்..!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில், பாரத் பயோடெக் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா பேசுகையில்,கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் லும்பி தோல் நோய்க்கான தடுப்பூசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசில் தடுப்பூசி (இன்கோவாக்) வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இந்த தடுப்பூசி, ஒன்றிய அரசின் மூலம் ஒரு டோஸ் ரூ. 325-க்கும், தனியார் தடுப்பூசி மையங்களுக்கு ஒரு டோஸ் ரூ. … Read more

ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் இணைந்தது

மும்பை: ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. கடற்படை தளபதி ஹரிகுமார் இந்த நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். சர்வதேச அளவில் அதிக நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட நாடாக சீனா முன்னணியில் உள்ளது. அந்த நாட்டின் கடற்படையில் 74 நீர்மூழ்கிகள் உள்ளன. அமெரிக்காவிடம் 69, ரஷ்யாவிடம் 66, ஜப்பான், தென்கொரியாவிடம் தலா 22 நீர்மூழ்கிகள் உள்ளன. இந்தியாவிடம் தற்போது 17 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கிகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. … Read more

கேரளாவில் 19 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு

கேரளாவில் 19 சிறார்களுக்கு அதிகம் தொற்றக்கூடிய நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் அருகே உள்ள காக்கநாடு பகுதியில் மாணவர்கள் சிலரின் பெற்றோர்களுக்கும் தொற்று இருந்ததால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை உண்டாகலாம் எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், தாக்கம் அதிகமாக இருந்தால், உடலில் நீரிழப்பு … Read more

ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைப்பு

மும்பை: ஐஎன்எஸ் கல்வாரி வகையை சேர்ந்த ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல் வகீர் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் மசாகன்  கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட கல்வாரி வகையை சேர்ந்த நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலான வகீர் நேற்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த விழாவில் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கலந்து கொண்டு ஐஎன்எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்து நாட்டுக்கு … Read more

இன்று தொடங்குகிறது ஜே.இ.இ மெயின் நுழைவுத் தேர்வு..!!

நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பு படிக்க வேண்டுமென்றால், அவர்கள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு 2 முறை நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு இன்று … Read more

விரைவில் இந்தியாவின் மிக நீளமான சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர்..!!

நாடு முழுவதும் தற்போது 24 விரைவு சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. அதோடு 18 விரைவு சாலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. இதில் தலைநகர் டெல்லியையும் நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையையும் இணைக்கும் விரைவு சாலை முக்கியமானது. கடந்த 2019 மார்ச் 8-ம் தேதி டெல்லி – மும்பை விரைவு சாலைக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இதன்படி டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவை இணைக்கும் வகையில் ஒரு … Read more