வங்கி மோசடி வழக்கில் கைதான விடியோகான் தலைவருக்கு சிபிஐ காவலில் சிறப்பு வசதி

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி விடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய விடியோகான் குழும நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத்தை நேற்றுமுன்தினம் போலீசார் கைது … Read more

இனி கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்… எங்கு தெரியுமா ?

 உலக நாடுகளில் புதிய வகை கொரோனா (கோவிட்- 19 ஓமிக்கிரான் BF.7) பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் எதிர்வரும் பண்டிகை மற்றும் புது வருட கொண்டாட்ட காலங்களில் புதிய வகை கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 … Read more

நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை – டெல்லி மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சீனாவில் நாள்தோறும் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் என்றும் அடுத்த 3 … Read more

நள்ளிரவில் வாகன சோதனையில் துப்பாக்கியை காட்டி காரில் இருந்தவர்களை மிரட்டிய உதவி ஆய்வாளர்..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரில் இருந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மீர்சவுக் காவல்நிலையத்தில் காவல்துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜாபர் என்பவர் கடந்த ஞாயிறன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓப்பன் டாப் கார் ஒன்றில் 5 பேர் அந்த வழியாக வந்த போது ஜாபர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் கார் நிற்காமல் தள்ளி போய் நின்றதால் … Read more

ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரிப்பு

டெல்லி: ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் கடன் மேலாண்மை குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்: மோடி போட்ட உத்தரவு – ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர்!

உலகின் ஏதோ ஒரு மூலையில் பரவும் நோய் நம்மை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி கொரோனாவுக்கு முன்னர் கேட்கப்பட்டிருக்கலாம். பூமிப் பந்து மிகச் சிறியது எந்த பக்கம் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் குறுகிய காலத்தில் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் உணரலாம் என்பதை கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய … Read more

 இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் யாத்திரையில் பங்கேற்க பரூக், உமர், மெகபூபா சம்மதம்: அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிப்பு

ஸ்ரீநகர்: ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க  பரூக், உமர் அப்துல்லா, மெகபூபா முடிவு செய்துள்ளனர். ஆனால் அகிலேஷ் யாதவ், மாயாவதி புறக்கணிக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரை காஷ்மீரை சென்றடையும்போது அதில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு … Read more

சபரிமலையில் நிறைவுபெற்ற மண்டல பூஜை காலம்: 'ஹரிவராசனம்' பாடி நடை அடைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 42 நாட்கள் மண்டல பூஜை காலம் முடிந்ததை அடுத்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு முன்னோடியாக … Read more

நிர்மலா சீதாராமன் எப்போது டிஸ்சார்ஜ்? – வெளியான முக்கிய தகவல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Source link

இரவு 1 மணி வரை கொண்டாட்டம் – வெளியான விதிகள்!!

புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பரவப் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. இதே போன்று 2019 கடைசியில் தான் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியது. அதே போல் தற்போதும் சீனாவில் கொரோனா வைரஸ் திரிபு பரவி வருகிறது. அதுவும் கோடிக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். நோய் … Read more