விபத்தில் சிக்கிய மோடியின் தம்பி; பாஜ வட்டாரத்தில் பரபரப்பு!

இந்திய பிரதமராக இருப்பவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி (Narendra Damodardas Modi). மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் பிரதமர் மோடி இருந்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். தாமோதர் தாஸ் முல்சந் மோடி மற்றும் கீரபேன் தம்பதிக்கு பிறந்த 6 குழந்தைகளில் நரேந்திர மோடி 3வது குழந்தையாக பிறந்தவர். நரேந்திர மோடி ஏற்கனவே அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரை … Read more

மும்பையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயின் பாதிப்பு அதிகரிப்பு..!

மும்பையில் அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கு அம்மை நோய் பரவி வருகிறது. மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தொற்று எண்ணிக்கை 1, 162 ஆக உள்ளது. இதில் மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் பரவும் … Read more

இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்

டெல்லி: இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. அரசின் அங்கீகாரத்தை அடுத்து நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மின்னணு விளையாட்டும் போட்டியாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்புகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் … Read more

பீகாரில் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொண்ட மகள்

பீகார்: தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது மகள் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கயா பகுதியை சேர்ந்த பூனம் இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இதனை இடையே அவரது மகள் ஷாந்தினிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. தனது கண்முன்னேயே தனது மகளின் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக பூனம் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதை அறிந்த ஷாந்தினி தாயின் ஆசையை … Read more

பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் – எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும்?

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது இதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 … Read more

ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிடுவதா? – காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரை டெல்லியை அடைந்த நிலையில், தற்போது யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மேற்கொண்டு வரும் யாத்திரை குறித்து குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பகவான் ராமரைப் போல … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு: வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விமர்சையாக நடைபெற்றது. தங்க அங்கி அணிவித்து ஐயப்பனை பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். சபரி மலையில் நவம்பர் 16-ம் தேதி மண்டலபூஜை தொடங்கியதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசித்து வந்தனர். 41 நாட்கள் நீடித்த மண்டல பூஜையின் இறுதி நிகழ்வின் போது, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கியை ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி … Read more

”காய்கறி வெட்டும் கத்தியால் எதிரியின் தலையை வெட்டுங்கள்”-பாஜக எம்பி பிரக்யா சர்ச்சை பேச்சு

மக்களிடையே மத வெறுப்பை துண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூருக்கு எதிராக காவல்துறையில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  கர்நாடகாவின் ஷிவ்மோகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூர், “லவ் ஜிகாத்தில் ஈடுபடுபவர்களை இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்திருங்கள். அந்த கத்தியை கொண்டு காய்கறிகளை வெட்ட முடியும் என்றால் … Read more

கர்நாடகாவின் 865 கிராமங்களுக்கு உரிமை கோரும் மகாராஷ்டிரா – ‘சட்டப்படி மீட்க’ பேரவையில் தீர்மானம்

நாக்பூர்: கர்நாடகாவில் உள்ள 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என்றும், அவற்றை சட்டப்படி மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும் என்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், கார்வார், பிதார், நிபானி, பால்கி உள்பட 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்குச் சொந்தம் என அம்மாநில அரசு உரிமை கோரி வருகிறது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு … Read more