மேற்குவங்கம் | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: சில நிமிடங்கள் ரயில் நிறுத்தம்
போல்பூர்: மேற்குவங்க மாநிலம் ஹவுரா-புதிய ஜல்பைகுரி பகுதியை இணைக்கும் வகையில் இயங்கி வருகிறது வந்தே பாரத் விரைவு ரயில். அண்மையில் தொடங்கப்பட்டது இந்த ரயிலின் சேவை. இந்நிலையில், இந்த ரயிலை குறிவைத்து மூன்றாவது முறையாக கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த கல்வீச்சில் சி14 பெட்டி சேதமடைந்துள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போல்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் வந்தே பாரத் ரயில் நின்றுள்ளது. … Read more