திாிணாமுல் காங். தேர்தல் பத்திரம் மூலம் ரூ.528 கோடி வருமானம்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் குறித்த ஆண்டு தணிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், கடந்த 2021-2022ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74கோடியாகும். இதில் ரூ.528.14கோடியானது தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கட்டணம், சந்தா மூலமாக ரூ.14.36கோடி வந்துள்ளது. வருமானத்தில் 96சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. கடந்த 2020-2021ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக கட்சியானது ரூ.42கோடி நிதியை பெற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஓருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இச்செயலில் ஈடுபட்ட நபர் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வெல்ஸ் பார்கோ என்ற பன்னாட்டு நிதி சேவை … Read more

2-வது பெண்குழந்தை பிறந்ததால் விரக்தி: குழந்தையை கொன்ற தாய்!

மராட்டியத்தில் 2-வது பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்த பெண், பிறந்து 3 நாட்களேயான குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உஸ்மானாபாத்தில் ஹோலியில் வசிக்கும் 25 வயதான பெண்ணுக்கு, காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது பெண்குழந்தை பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண், கடந்த டிசம்பர் 29 அன்று குழந்தையை கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொன்றார். விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து … Read more

இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக வேண்டும் – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: “இந்தியா மென்பொருள் துறையில் தன் திறனை உலகுக்கு நிருபித்துள்ளது. இனி, மென்பொருள் தயாரிப்புகளில் உலகின் மையமாக மாற இந்தியா முயல வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று 7-வது ஆண்டு ‘டிஜிட்டல் இந்தியா விருதுகள்’ விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரவுபதி முர்மு இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினார்: “தொழில்நுட்பக் கட்டமைப்பு ரீதியாக இந்தியா உலகின் முக்கிய நாடாக வளர்ந்துள்ளது. மக்கள் நலனை மையப்படுத்திய தொழில்நுட்பக் கட்டமைப்பை இந்தியா … Read more

கோவா விமானத்தில் பணிப்பெண்களிடம் பயணி அத்துமீறல்: பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

பானாஜி: விமானத்தில் பணிப்பெண்களிடம் வெளிநாட்டு பயணி அத்துமீறிய சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோவாவில் உள்ள மோபாவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 5ம் தேதி டெல்லியில் இருந்து கோ பர்ஸ்ட் என்ற விமானம் சென்றது.  அதில் பயணம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி திடீரென விமான பணிப்பெண்களிடம் அத்துமீறினார். ஒரு பணிப்பெண்ணை பிடித்து தன்னுடன் கட்டாயப்படுத்தி அமர வைத்த அவர், இன்னொரு பணிப்பெண்ணிடம் ஆபாசமாக பேசினார். இதுபற்றி விமான ஒழுங்குமுறை அதிகாரிக்கு தகவல் … Read more

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இம்மாதம் இந்தியாவுக்கு வருகை?

இந்தியாவுக்கு இரண்டாம் கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமா் மோடி தனது பிறந்த நாளன்று திறந்துவிட்டாா். இந்த சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. சிவிங்கிப் … Read more

பட்ஜெட் தொடருக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம்?

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதி போட்டியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அமைச்சரவையை மாற்றி அமைக்க விரும்புகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமீபத்தில் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த குஜராத் மாநில பாஜக.வினருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. … Read more

கொரோனா தொற்று: இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், கொரோனாவின் புதிய திரிபுகளும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. அண்மையில் கூட, அதிவேகமாக பரவி … Read more

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வந்த அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் கலந்து கொண்ட இரண்டுநாள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த மாநாடு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மாநாட்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மேலும் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் ஓய்வு பெற்ற பேராசிரியையின் சலங்கை ஒலி -மெய் சிலிர்த்த பக்தர்கள்

சபரிமலை சன்னதியில் 60 வயது ஓய்வு பெற்ற பேராசிரியையின்  பாரம்பரியமிக்க பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் சுதியும் லயமும் சேர்ந்த சலங்கை ஒலி நாட்டியம் கண்டு மெய் சிலிர்த்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கரிக்கோடு பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி விஜயலட்சுமி. 60 வயது நிரம்பிய இவர் கொல்லம் டி.கே.எம். பொறியியல் கல்லூரியின் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். இளமையிலேயே முறைப்படி பரதநாட்டியம் கற்ற காயத்ரி விஜயலட்சுமி, குடும்ப சூழல் காரணமாக … Read more