நீயில்லாத விடுமுறை வருத்தம் தரும் உண்மையான அன்பு இருந்தால் தனியாக வந்து சந்திக்கவும்…: 13 வயது மாணவிக்கு காதல் கடிதம் 47 வயது ஆசிரியர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 47 வயது ஆசிரியர் 13 வயது மாணவிக்கு தனியாக சந்திக்க வரவும் என காதல் கடிதம் எழுதியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி ஒருவருக்கு ஹரி ஓம் சிங் ( 47) என்ற ஆசிரியர் காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், உன்னை அதிகம் விரும்புகிறேன். விடுமுறை காலத்தில் … Read more

நடுங்க வைக்கும் குளிர், பனிமூட்டத்தால் தவிப்பு – டெல்லியில் விமானங்கள் தாமதம்

வட இந்தியாவில் வழக்கத்துக்கும் அதிகமான உறைய வைக்கும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர் காலமாக இருந்தாலும், வாட்டி வதைக்கும் குளிரால் வட இந்திய மக்கள் அவதிப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த வருடம் அதிகளவிலான குளிர் அங்கு நிலவி வருகிறது. சொல்லப்போனால், ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு டெல்லியின் பல இடங்கள் சென்றுள்ளது. குறிப்பாக சஃப்தர்ஜங் … Read more

நடுவானில் 2 முறை மாரடைப்பு: பயணி உயிரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர்

மும்பை: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஹெபடாலஜிஸ்ட் கன்சல்டன்ட் மருத்துவராக இருப்பவர் விஸ்வராஜ் வெமலா. இவர் தனது தாயை பெங்களூ ருக்கு அழைத்து வருவதற்காக பர்மிங்ஹாமில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இந்நிலையில் விமானத்தில் 43 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்த விஸ்வராஜ், நாடித்துடிப்பு இல்லாமல் மூச்சு விடாமல் இருந்த அந்தப் பயணியை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஒருமணி நேர சிகிச்சையில் அந்தப் பயணி இயல்பு நிலைக்கு வந்தார். … Read more

இமாச்சலபிரசதேசத்தில் சுக்விந்தர் சுகு முதல்வராக பதவியேற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம் விரிவாக்கம்

இமாச்சலபிரசதேசம்: இமாச்சலபிரசதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் நடந்து வருகிறது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிராமணம் செய்து வைக்கிறார். காங்கிரசின் சுக்விந்தர் சுகு டிசம்பர் 11-ல் முதல்வராக பதவியேற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

”வெளிய தலைகாட்ட முடில.. எங்களுக்கும் குடுங்க” – தெலங்கானா வழுக்கை தலை சங்கத்தினர் கோரிக்கை

முடி உதிர்தல், இள வயதில் நரை முடி வருவது எப்படி பலருக்கும் கடுப்பாக இருக்கிறதோ அதே போல வழுக்கை தலையாக இருப்பவர்கள் சமூகத்தில் அனுபவிக்கும் பல இன்னல்களும் வெறும் வாய் வார்த்தையாக சொல்வது எளிதாக இருக்காது. இப்படி இருக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது போன்று வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வழுக்கை தலை உள்ளவர்களுக்கென தெலங்கானாவில் சங்கம் ஒன்று … Read more

சொகுசு கப்பலை 13-ந் தேதி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!….

பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வருகிற 13-ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி கங்கா விலாஸ் என்ற சொகுசு கப்பலை வாரணாசியில் இருந்து வருகிற 13-ந்தேதி மெய்நிகர் காட்சி வழியே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த கப்பலானது வாரணாசியில் புறப்பட்டு பாட்னா நகரை சென்றடைந்து, பின்னர் கொல்கத்தாவுக்கு செல்லும். அதன்பின்பு வங்காளதேசத்திற்கு புறப்பட்டு சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும். இதன் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். 80 … Read more

வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் ரூ.6,000.. அரசிடம் கோரிக்கை..!

தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார். அதில், “சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் பல பிரச்சனைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கின்றனர். அதிலும், பலருக்கு சிறு வயதிலேயே வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. … Read more

ஜப்பானில் முதல் முறையாக நடைபெறும் விமானப் படை போர் ஒத்திகையில் இந்திய பெண் பைலட் பங்கேற்கிறார்

ஜோத்பூர்: ஜப்பானில் ‘வீர் கார்டியன் 2023’ என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள இருமா விமானப் படை தளம் ஆகிய வான் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் 26-ம் தேதி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விமானப் படையில் 3 பெண் போர் பைலட்கள் … Read more

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது

கேரளா: கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது. 2 கும்கி யானைகள், மருத்துவ குழு உதவியுடன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு நுழைந்த மக்னா யானை மனிதர்களை தாக்க துவங்கியதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

டெல்லி: கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!..

டெல்லியில் கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வடக்கு டெல்லியின் குதுப் ரோடு பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.   இருப்பினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தவர். அவர் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் குலாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அந்த … Read more