ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

ஆந்திர: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் ஏலுரு மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி ராவ் என்று தெரிய வந்துள்ளது. 2 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்

ஜம்மு: ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்களும், போலீஸாரும் விரைந்து சென்று 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி முழுவதையும் பாது காப்பு படையினர் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் … Read more

2 மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள்! 7வது நாளில் யாருடன்? – புது ஒப்பந்தம்

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வித்தியாசமான முறையில், இரண்டு பெண்களுக்கு இடையே ஒரு ‘தனிப்பட்ட’ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதாவது, இரண்டு பெண்களுமே ஒரே நபரைதான் திருமணம் செய்துள்ளனர். இதில், அந்த நபர் எத்தனை நாள்கள் இருவரோடும் தனித்தனியாக வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  அந்த ஒப்பந்ததின் மூலம், அந்த நபரின் மனைவிகள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். தங்கள் கணவர், வாரத்தில் தலா 3 நாள்கள் ஒருவருடன் இருக்க வேண்டும் எனவும், மீதம் … Read more

ஒலிமாசு காரணமாக மேற்குவங்க சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை குறைவு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்லவ்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் வரும் பறவைகள் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகச் சுருங்கி விட்டதால் பறவை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து பறவைகள் கணக்கெடுப்பு குறித்து இன்று சிறப்பு பயிற்சி வகுப்பு … Read more

ரஷ்யாவிலிருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: 240 பயணிகள் உயிர் தப்பினர்

பனாஜி:  மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து அஷுர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 240 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இது கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.15 மணி தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக  டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திய வான்எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உஸ்பெகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.   … Read more

பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இடம்பெறும் புதிய அம்சங்கள் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்றுவரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். … Read more

வயதான பள்ளி ஆசிரியரை சுற்றி வளைத்து தாக்கிய இரு பெண் காவலர்கள்

பீகாரில் வயதான பள்ளி ஆசிரியரை இரு பெண் காவலர்கள் சுற்றி வளைத்து தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நாவல் கிஷோர் பாண்டே என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடை வீதிக்குச் சென்ற அவர், கீழே விழுந்த தனது சைக்கிளை எடுக்க தாமதம் ஆனதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கண்ட இரு பெண் காவலர்கள் தாங்கள் வைத்திருந்த தடியால் கிஷோரை சரமாரியாகத் தாக்கினர். இது … Read more

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு திரிணாமுல் காங். இளைஞர் அணி தலைவர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குந்தல் கோசை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குந்தல் கோஷ் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் டைரி உள்ளிட்டவை பறிமுதல் … Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டு நாடாளுமன்றம் முற்றுகை – தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று 50 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2003 டிசம்பர் 22-ம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. … Read more

குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா, உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கோவிட்-19 தடுப்பூசி iNCOVACC ஐ வருகிற 26ந்தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார். இந்த தடுப்பூசி, அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களிடம் 800ரூபாய் விலையிலும் கிடைக்கும் என்றும் கூறினார். Source link