Bihar Truck accident : 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி ; ஓட்டுநர் கைது!

பிகாரில் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மத வழிப்பாட்டு கூட்டத்தில், லாரி புகுந்ததில் 7 சிறுவர்கள் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மன்ஹார் – ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்கு புகுந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தற்போது சீராகியுள்ளது.  இந்த விபத்து நேற்று ஏற்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்தை ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரோஷன் … Read more

புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்து.. சுமார 30 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். நவாலே பாலத்தில் நேற்று லாரிகள், கார்கள், ஒன்றின் மீது ஒன்று அடுத்தடுத்து மோதின. சரிவுப் பாதையில் சென்ற லாரி ஒன்றின் பிரேக் வேலை செய்யாததால் திடீரென நின்று விட பின்னால் வந்த கார் மோதி கவிழ்ந்ததையடுத்து, இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. Source link

பீகார், மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து: 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மெஹ்னாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து – 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பீகார் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாங்களும் ஒரு நாள் குஜராத் மக்களின் மனங்களை வெல்வோம் – அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: “நாங்களும் ஒரு நாள் குஜராத் மக்களின் மனங்களை வெல்லுவோம்” என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அங்கு பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோல் என்ற இடத்தில் சாலையோர கூட்டம் ஒன்றில் ஞாயிற்றுகிழமை கேஜ்ரிவால் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் சிலர் மோடி… மோடி என்று … Read more

அடேங்கப்பா! ஒரே சைக்கிளில் 9 பேரா? மாஸ் காட்டும் நபர்!

இன்றைய காலகட்டத்தில் தான் சிறுவயதினர் கூட பைக்குகளை ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலும் பலரும் சைக்கிளை தான் ஒட்டினர்.  இன்னும் பல வருடங்களுக்கு முன்னர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சைக்கிள் தான் ஒட்டி வந்தனர், இதற்கு எரிபொருளும் தேவையில்லை, சுற்றுசூழல் மாசுபாடும் ஏற்படாது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமும் கூட.  இப்போது சாலைகளில் பெரும்பாலும் கார்கள் மற்றும் பைக்குகளை தான் பார்க்க முடிகிறது, அவ்வளவாக சைக்கிளை பார்க்க முடிவதில்லை.  இந்நிலையில் … Read more

கொச்சியில் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் மீது மர்மநபர் தாக்குதல்: ஒருவர் கைது

கொச்சி: கொச்சியில் கோஸ்ரீ பாலம் அருகே கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் மீது மர்மநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தலைமை நீதிபதி மணிகுமாரின் காரை தடுத்து நிறுத்தி மர்மநபர் தாக்கியுள்ளார். இது தமிழ்நாடு அல்ல என்று சொல்லிக்கொண்டு போதையில் இருந்த நபர் அவதூறாக பேசியதாக குற்றசாட்டு தெரிவித்துள்ளனர். தலைமை நீதிபதியை தாக்கிய டிஜோ என்பவரை போலீஸ் கைது செய்தனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்.. மாணவி, மாணவர்கள் விசாரணைக்கு ஆஜர்..!

பெங்களூரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவர்கள் 3 பேரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கல்லூரியில் 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களில் ஆர்யன், தினகர், ரியா … Read more

கர்ப்பமான சிறுமியை கிணற்றில் வீசிய ஆசிரியர்!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியைச் சேர்ந்த சிவேந்திரா என்பவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சிறிது நாட்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஆசிரியரிடம் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆசிரியர் கருவை கலைக்க மருந்து ஒன்றை … Read more

கர்நாடகாவில் பட்டியலினப் பெண் தண்ணீர் அருந்தியதால் நீர்த்தொட்டியில் பசு மூத்திரம் ஊற்றிய ஊர் மக்கள்

சம்மராஜநகர்: கர்நாடகாவில் சம்மராஜநகர் மாவட்டத்தில் பொது நீர்த்தொட்டி ஒன்றிலிருந்து பட்டியலினப் பெண் ஒருவர் தண்ணீர் அருந்தியதால் அந்தத் தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு தொட்டியில் பசு மூத்திரம் தெளித்த அவலம் நடந்துள்ளது. சம்மராஜநகர் ஹக்கோடோரா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் லிங்காயத் சாதியினர் அதிகம் வசிக்கின்றனர். அச்சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக உள்ள அந்த நீர்த்தொட்டியிலிருந்து பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் தண்ணீர் அருந்தியுள்ளார். இதனையடுத்து அந்தத்தொட்டியின் நீர் வீணாக வெளியேற்றப்பட்டுள்ளது. இது குறித்த … Read more

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது: அமெரிக்க தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் தகவல்!

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஒத்துழைப்புக்கான நட்பாக இருநாடுகளின் நட்புறவு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். வாஷிங்டனில் இந்திய ஹவுஸ் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஜான், குவாட் மாநாடு, இந்தியா தலைமையேற்றுள்ள ஜி 20 கூட்டமைப்பின் மாநாடு போன்ற நிகழ்வுகள் மூலமாக அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி- அதிபர் ஜோ பைடன் இடையிலான நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். Source … Read more