பாலியல் வன்கொடுமைக்கு தண்டனை வெறும் 5 தோப்புக்கரணங்களா? – பீகார் பஞ்சாயத்தின் தீர்ப்பு!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடந்தாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் குற்றங்கள் பதிவாவதால், ’பாலியல் வல்லுறவின் தலைநகரம் இந்தியா’ என்றே அழைக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை நிரூப்பிக்கும் விதமாக 5 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு 5 தோப்புக்கரணங்களை தண்டனையாக வழங்கியுள்ளது பீகாரின் ஒரு கிராம பஞ்சாயத்து. … Read more

சபரிமலை பெயரை பயன்படுத்தக் கூடாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஹெலி கேரளா எனும் தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக ஹெலி கேரளா என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. அதன்படி, கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் விஐபி … Read more

ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் – அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஜனநாயக ரீதியிலான விவாதங்கள், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் ஆகிய முப்பெரும் வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டி்ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச … Read more

'எதிர்பார்க்காதது.. ஆச்சரியமா இருக்கு..!' – அசோக் கெலாட் மீது காங்கிரஸ் அப்செட்?

சச்சின் பைலட் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்த கருத்துக்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு அடுத்த படியாக மூத்தத் தலைவராக பார்க்கப்படுபவர் சச்சின் பைலட். இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு, இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் … Read more

ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களுர் நரசிம்மமூர்த்தி மனு அளித்துள்ளார். மனுவை  உச்ச நீதிமன்ற தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இலவச மின்சாரம் பெறுவதற்கு பதில் மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்ட முடியும் – குஜராத் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

காந்திநகர்: அரசிடமிருந்து பொதுமக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஆரவள்ளி மாவட்டம் மொடசா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும். இதற்கான வழி … Read more

இந்திய வரலாற்றை தைரியமாக திருத்தி எழுதுங்க நாங்க இருக்கோம்… வரலாற்று அறிஞர்களுக்கு அமித் ஷா அழைப்பு!

17 ஆம் நூற்றாண்டில் அஸாம் மாநிலத்தை ஆட்சி புரிந்துவந்த அஹோம் ராஜ்ஜியத்தில் வீர, தீரம் மிக்க போர்ப் படை தளபதியாக திகழ்ந்தவர் லச்சிட் போர்புகன். அஸாம் மீதான முகலாய படையெடுப்பை முறியடித்ததில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளதாக அஸாம் மாநில வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்புமிக்கவரின் பிறப்பை கௌரவி்க்கும் விதமாக, லச்சிட் போர்புகனின் பிறந்த நாளான நவம்பர 24 தேதியை அஸாம் மாநிலத்தில் லச்சிட் திவாஸ் என்ற பெ.பரில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதுடன், அன்றைய தினம் … Read more

2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று: முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா

காந்திநகர்: 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

`கௌரவ’த்திற்கு பெண் உயிரை கேட்கும் குடும்ப அமைப்புகள் – எப்போதுதான் மா(ற்)றப்போகிறோம்?

டெல்லியில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி, உ.பி.யில் பல துண்டுகளாக வெட்டப்பட்ட மனைவி, தமிழகத்தின் திருப்பூரில் ஷால் மூலம் கழுத்தை நெறித்து கணவனாலேயே கொலை செய்யப்பட்ட மனைவி…. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாவற்றிலும் இருக்கும் இரு ஒற்றுமைகள் – பெண்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; அதுவும் தனது நெருங்கிய உறவால். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை… ஐ.நா.வும் சொல்கிறது. ஆம் இணையராலும், கணவனாலும், குடும்பத்தினராலுமே பெண் இப்படி கொலைசெய்யப்படுவதென்பது, நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது என்கின்றது … Read more

மழைக் காலம் வந்து விட்டது.. இந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம்..!

மழைக் காலம் வந்தாலே தொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி, சைனஸ், தலைவலி, ஆஸ்துமா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே,உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மழை காரணமாக, நோய் தொற்றுகள் அதிகம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, நீங்கள் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் தேவை. அதேபோல ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். இல்லையெனில், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படலாம். இந்நிலையில், தெலுங்கானாவில் டைபாய்டு … Read more