EWS reservation: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று

புதுடெல்லி: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? என்ற அனைவரும் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கல்வி மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்பு திருத்தம் செல்லுபடியாகுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கான தீர்வு இன்று கிடைத்துவிடுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன. 103வது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடி தன்மை குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (2022, நவம்பர் 7 திங்கட்கிழமை) அறிவிக்க … Read more

வெளிநாட்டு வகை பாம்புகளை விரைவு ரயிலில் கடத்திய பெண் கைது

ஜார்கண்ட்: டாடா நகர் ரயில்நிலையத்தில் 28 வெளிநாட்டு வகை பாம்புகளை விரைவு ரயிலில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். நீலாச்சல் விரைவு ரயிலில் சென்ற பெண்ணிடம் இருந்து பாம்புகள், உயிரினங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

டெங்கு பரவல் – 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்த நிலையில் அசாமில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், திபு நகரில் தீவிர டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் அரசு … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய … Read more

2 சிவிங்கி புலிகள் காட்டில் விடுவிப்பு: பிரதமர் மோடி மகிழ்ச்சி

புதுடெல்லி: மத்திய பிரதேச பூங்காவில் உள்ள நமீபியா சிவிங்கி புலிகளில், 2 மட்டும் வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டுள்ளன. இந்தியாவில் அழிந்து விட்ட சிவிங்கி புலிகளை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதற்காக, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டன. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய உயிரியல் பூங்காவில் இவற்றை, கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் திறந்து விட்டார். இந்தியா வந்து 50 நாட்கள் … Read more

குஜராத் தேர்தலில் இருந்து விலக பேரம் பேசினார்கள்: கேஜ்ரிவால் புகார் | பாஜக மறுப்பு

புதுடெல்லி: குஜராத் தேர்தலில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க பாஜக.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைய வேண்டும் என்ற பாஜக.வின் கோரிக்கையை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நிராகரித்துவிட்டார். இப்போது, குஜராத் பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஆம் ஆத்மி விலகினால், கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் … Read more

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா?.. இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு 2019-ல் கொண்டு வந்தது. 103வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இடஒதுக்கீடு வரம்பு 50%த்தை மீறக்கூடாது என்ற விதியை மீறியது, ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி? எந்த … Read more

தெலங்கானா, பிஹார், உ.பி. இடைத்தேர்தல்: 7 தொகுதிகளில் 4-ல் பாஜக வெற்றி

தெலங்கானா, பிஹார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஹரியாணா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா உத்தவ் அணி ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின. தெலங்கானாவின் முனுகோடு, பிஹாரின் கோபால்கன்ச், மொகாமா, உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஒடிசாவின் தாம்நகர், ஹரியாணாவின் … Read more

புதுச்சேரி நகரப்பகுதியில் துணை மின்நிலைய மதில் சுவர் மீது போதை ஆசாமி ஏறியதால் 30 நிமிடங்கள் மின்தடை..!

புதுச்சேரி நகரப் பகுதியில் போதை ஆசாமி ஒருவரால் அரைமணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள வெங்கட்டா துணை மின் நிலையத்தின் மதில் சுவர் மீது போதையில் மர்ம நபர் ஒருவர் ஏறி உள்ளார். இதனை பார்த்த மின் ஊழியர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி விட்டு அந்த நபரை பிடிக்க செல்வதற்குள் தப்பி ஓடி விட்டார். இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட மின்சாரம்  மீண்டும் வழங்கப்பட்டது . இதுதொடர்பாக மின்சாரதுறை அதிகாரிகள் கொடுத்த … Read more

திருப்பதி கோவில் நாளை 11 மணி நேரம் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 11 மணி நேரம் மூடப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மூடப்படுகிறது.