அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்..!

டெல்லி: அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. கோவாக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதியும் செய்தது. இந்த தடுப்பூசி 2 டோஸ் மற்றும் பூஸ்டர் டோசாக நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் கோவாக்சின் உட்பட 219.83 கோடி டோஸ் … Read more

“சாவர்க்கர் அவமதிப்பை மகாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது” – முதல்வர் ஷிண்டே கொந்தளிப்பு

மும்பை: வீர் சாவர்க்கர் அவமதிக்கப்படுவதை மகாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காட்டமாக தெரிவித்துள்ளார். சாவர்க்கர் நினைவிடத்தில் இந்துத்துவா கருத்தரங்கில் பேசிய ஏக்நாத் ஷிண்டே இவ்வாறாக தெரிவித்துள்ளார். அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்தபோது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்றும், பின்னாளில் பிரிட்டிஷ்காரர்களுடன் இணைந்து காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் ராகுல் காந்தி தொடர்ச்சியாக முன்வைத்து வரும் விமர்சனத்தை ஒட்டி ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி … Read more

ஹெட்ஃபோன் யூஸ் பண்றீங்களா? 100 கோடி பேருக்கு இந்த பிரச்சினை!

உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், 100 கோடிக்கும் அதிகமான பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்களைப் பயன்படுத்துவதால் காது கேளாமை ஏற்படும் அபாயம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சத்தமாக இசையமைக்கும் இடங்களுக்குச் செல்வதாலும் இந்த பிரச்சினை ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் … Read more

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை! பல்டி அடித்த கேரள அரசு

Kerala Sabarimala Temple: கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து “பெண்கள் அனுமதி” என்ற அறிவுறுத்தல் திரும்ப பெறப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் மற்றும் மாதவிடாய் வயதுடைய பெண்கள் செல்வது அனுமதிக்கப்படுவதில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகும். சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) … Read more

அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த ஒரு அரசியல் அழுத்தத்தின் பேரில் கோவாக்சின் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது. கோவாக்சின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனையில் பல முறைகேடுகள் என தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி போடும் கணக்கு… சறுக்கும் பாஜக… செம அடி வாங்கும் காங்கிரஸ்!

பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது. மறுபுறம் ஆம் ஆத்மி கட்சியின் வருகையானது வாக்கு வங்கி … Read more

இனி அனைத்திலும் USB Type-C சார்ஜர்! ஐரோப்பாவைத் தொடரும் இந்தியா..!!

ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்டாக USB Type-C ஐ ஆக்குவதை இந்தியாவும் பரிசீலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்த விலை ஃபீச்சர் ஃபோன்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்திய  நிலையில் அமைச்சரவைகளுக்கு இடையிலான பணிக்குழுவில் புதன்கிழமை இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால், Apple நிறுவனம் பாதிக்கப்படலாம்.  … Read more

உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.700 உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான வரியை டன் ஒன்றுக்கு 700 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 9,500 ரூபாயாக இருந்த வரி இன்று முதல் 10,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியை ஒன்றிய அரசு நேற்று உயர்த்தியதுடன் டீசல் ஏற்றுமதிக்கான விகிதத்தை குறைத்தது. ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீதான வரி இன்று முதல் டன் ஒன்றுக்கு … Read more

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி? கேரளாவில் மீண்டும் வெடித்தது சர்ச்சை!

கேரள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கிவி்ட்டதையடுத்து, நிகழாண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து கேரள காவல் துறை … Read more

சட்டமன்ற பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் மறுப்பு..!!

டெல்லி: சட்டமன்ற பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. சத்யேந்திர ஜெயினின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.