தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் வன பகுதியில் விடுவிப்பு: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தை புலிகள் (சீட்டா) வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘சீட்டா’ ரக சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதேநேரம் அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. … Read more

முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முனுகாடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்.கட்சி முன்னிலையில் உள்ளது. டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 563 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 2-வது சுற்று முடிவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் பிரபாகர் 14,211 வாக்குகள் பெற்றுள்ளார்.

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் – இமாச்சல் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி

சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேச பேரவைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் தானி ராம் சண்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த … Read more

தேர்தல் ஆணையம் அறிவிப்பு 1 எம்பி, 5 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல்: டிச.5ல் நடக்கிறது

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் காலமானார். இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி காலியானது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சட்டமன்ற தொகுதி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முகமத் அசாம் கான் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு காரணங்களால் ஒடிசாவின் பதம்பூர், பீகாரின் குர்ஹானி மற்றும் சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் சட்டமன்ற தொகுதிகளும் காலியானது. இதனை தொடர்ந்து மெயின்புரி மக்களவை மற்றும் காலியாக உள்ள 5 சட்டமன்ற … Read more

ரூ.2 கோடி ஒதுக்கீடு; ரூ.12 லட்சம் மட்டுமே செலவு செய்ததால் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததா..?

குஜராத்தில் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, கடந்த வாரம்தான் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்குள் விபத்து நேரிட்டுள்ளது. இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க முடியும். ஆனால், விபத்து நேரிட்டபோது 500-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பாலம் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை பாலத்தில் அனுமதித்துள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்து … Read more

உ.பி.யின் மைன்புரி மக்களவை மற்றும் 5 பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உ.பி.யின் மைன்புரி தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் காலமானார். இதனால் காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் மீது என்.ஐ.ஏ.குற்றப் பத்திரிகை தாக்கல்..!

சர்வதேச தீவிரவாத இயக்கத்தை நடத்தியதாக தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ஷகீல் உள்ளிட்டோர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டி கம்பெனி என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி இந்தியாவில் குற்றம் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தாவூத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாவூத் இப்போது தலைமறைவாக உள்ளார். இதே போன்று தாவூத்தின் சகோதரர் இப்ராகிம் காஸ்கர், சோட்டா ஷகீல், மற்றும் தீவிரவாத செயல்களுக்காக ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கைது … Read more

ஆர்டிஐ மனுவுக்கு 9000 பக்க தகவல்: மாட்டு வண்டியில் ஏற்றி சென்ற சமூக ஆர்வலர்

சிவ்புரி: மத்தியப்பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள பைரட் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கான் தகாட். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் ஆவாஸ் யோஜனா, அனைவரும் வீடு திட்டம் குறித்த விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் நகராட்சி பதில் அளிக்கவில்லை. பின்னர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தினால் மட்டுமே விவரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆங்காங்கு கடன் பெற்று ரூ.25 ஆயிரத்தை மக்கான் … Read more

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு: இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுக்க‌ப்பட்டது. இதனால் தாயும் இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி க‌ஸ்தூரி (30), கர்நாடகாவின் துமகூருவில் உள்ள பாரதி நகரில் வ‌சித்து வந்தார். கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2-ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் துமகூரு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் தாய் அட்டை, குடும்ப‌ அட்டை ஆகியவை கேட்கப்பட்டது. அந்த … Read more

தொழிலதிபரை பெண்ணுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல்… சினிமாவை மிஞ்சும் சம்பவம்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் வகையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக மூன்று பேரை டெல்லி போலீசார் நேற்று (நவ. 5) கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52),  முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,”உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்துவரும் 45 வயதான சந்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), … Read more