காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டது எலிகள்: உபி. போலீஸ் அறிக்கை; நீதிபதி அதிர்ச்சி
மதுரா: உத்தரப்பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் அளித்த அறிக்கையால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் போதைப்பொருள் கடத்தல் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஷெர்கர் காவல்நிலைய கிடங்கில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல்நிலைய கிடங்கில் 195 கிலோ கஞ்சாவும் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட … Read more