கேரளா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்

கேரளா: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சபரிமலைக்கு சென்றுவிட்டு ஆந்திரா திரும்பும் போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவேக்சின் தடுப்பூசி அனுமதியில் நெருக்கடியா? – பாரத் பயோடெக் நிறுவனம் சொல்வது என்ன?

கோவேக்சின் தடுப்பூசிக்கு அரசியல் அழுத்தம் காரணமாகவே விரைவாக அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவாக்சின்’ தடுப்பூசி தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில் அரசியல் அழுத்தம் இருந்ததாக தற்போது சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் … Read more

சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை விமர்சித்த ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

தானே: சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தானே போலீஸார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில், தேசிய ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அகோலா மாவட்டம் வாதேகான் என்ற இடத்தில்பேசும்போது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு பயந்து கருணை மனு அனுப்பிய சாவர்க்கரைதான் பாஜகமற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போற்றுகின்றனர்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவத்துள்ளன. இது குறித்து … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினமும் 10 வழக்கை விசாரிக்க வேண்டும்: தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தினமும் பத்து வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வு நீதிபதிகளும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டு உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கடந்த 9ம் தேதி டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றதும், வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை அமல்படுத்தினார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நேற்று அவர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், ‘உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் மனுக்கள், ஜாமீன் கோரிக்கைகள் என தினமும் பத்து … Read more

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்: நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கர் லால் சர்மா என்பவர் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி தானே வாதாடினார். கீழமை நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்காமல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாக கூறிய அவர் பல்வேறு ஆவணங்களையும் தாக்கல் செய்தார். ஆங்கிலம் தெரியாத அவர் இந்தியில் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: … Read more

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.19, 20-ல் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தி, உருது, அரபி உட்பட 13 மொழிகளில் திருக்குறள் – காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்

புதுடெல்லி: திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு (சிஐசிடி) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியது. அதன்படி சம்ஸ் கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சவுராஷ்டிரி, நரிக் குறவர்களின் வாக்ரிபோலி, படுகு, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார். சிஐசிடிஎல் … Read more

பேரத்தில் ஈடுபட்டதா பாஜக…? – தெலுங்கானாவில் முக்கிய நிர்வாகிக்கு சம்மன்

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (டிஆர்எஸ்)  நான்கு எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டி, ஒரு வீடியோ ஒன்றை அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கடந்த நவ. 4ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.  சுமார் ஒருமணிநேரம் கொண்ட வீடியோ உள்ளதாக தெரிவித்த அவர், மேலும், அதன் 5 நிமிட காட்சியை மட்டும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.  டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பண்ணை வீடு ஒன்றில் சந்தித்த இடைத்தரகர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் … Read more

நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்குகிறது.. அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.!

நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்குவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 29ம் தேதி வரை தொடர் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 23 பணி நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஆக்கப்பூர்வமாக இந்த கூட்டத் தொடரை நடத்தித் தருமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். Source link

கட்சி தலைவர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா திடீர் விலகல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா(85) கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். … Read more