நிலக்கரி சுரங்க முறைகேடு: ‘முடிந்தால் கைது செய்யுங்கள்’ – ஜார்க்கண்ட் முதல்வர் சவால்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்களை முறைகேடாக வழங்கியதாகவும், கருப்பு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி ஹேமந்த் சோரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல், ‘முடிந்தால் என்னை அமலாக்கத்துறை கைது … Read more