ஊழல்வாதிகள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஊழல்வாதிகள் என நிரூபிக்கப்பட்ட பிறகும், அத்தகையவர்கள் புகழப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஊழலுக்கு எதிராக உறுதியாக போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஊழல் ஒரு தீமை. அதில் இருந்து நாடு விலகி இருக்க வேண்டும். போதிய வசதிகள் இல்லாதது, அரசாங்கத்தின் தேவையற்ற அழுத்தம் எனும் இரண்டும்தான் ஊழலுக்கு மிக … Read more

உதவி கேட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்: உடந்தையாக இருந்த காதலி

மும்பை: உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மற்றும் காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் வசாயை சேர்ந்த 31 வயது பெண்ணின் கணவர் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். பெண்ணிற்கு கடந்த 2021-ம் ஆண்டு புத்தாண்டு விருந்தின் போது வசாய் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ராகுல் லோண்டே என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது ராகுல் லோண்டேவின் காதலியான பிரியா உபாத்யா என்பவரையும் அப்பெண்ணிற்கு … Read more

தொங்கு பாலம் விபத்திற்கு பிறகு செல்வாக்கை நிரூபிக்குமா பாஜக; குஜராத் தேர்தல்களம் ஓர் அலசல்

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநில சட்டமன்ற தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தல் அரசியல் களத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் தான். ஏனென்றால் குஜராத் மாநில முதல்வராக அடுத்தடுத்து வெற்றியை பெற்ற பிறகுதான் பிரதமராகும் வாய்ப்பு நரேந்திர மோடிக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி மற்றும் … Read more

ஆந்திராவில் கனமழை – வயலில் மின்கம்பி அறுந்து 6 பெண்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழைக்கு உயர் அழுத்த மின் கம்பி அறுந்து வயலில் விழுந்ததில், விவசாய கூலித் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா – கர்நாடகா மாநில எல்லையில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பொம்மனஹோலு மண்டலம், தர்கா ஹொஸ்னூரு கிராமத்தில், ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், சோளப் பயிரில் களை எடுக்கும் பணியில் நேற்று 9 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கடந்த … Read more

'பயமா.. எனக்கா.. முடிஞ்சா கைது செய்யுங்க!' – முதல்வர் ஹேமந்த் சோரன் சவால்!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறைக்கு சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கிய விவகாரத்தில், முறைகேடு நடைபெற்றதாக, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி, … Read more

பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப் படாதது ஏன்… மத்திய அமைச்சர் கூறுவது என்ன!

பெட்ரோல்-டீசல் விலை: கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவில் சரிந்தாலும், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசலில் எந்த மாற்றமும் இல்லை. நவம்பர் 1ம் தேதி முதல் எண்ணெய் விலை லிட்டருக்கு 40 காசுகள் வரை குறைக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்றும், அது … Read more

மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: மத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் புகார் மேலாண்மை அமைப்பின் இணைய முகப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதிய இணைய முகப்பை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பதைபதைக்கும் வீடியோ..!! மின்கம்பியில் விழுந்த கார் சாவி… எடுக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி!

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரின் உதயகிரி பகுதியில் வசித்து வருபவர் மல்லப்பா (58). இவர், அந்த பகுதியிலுள்ள ஹிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் முன்புறம் சென்ற மின் கம்பியில் கார் சாவி கிடந்துள்ளது. இதனை கண்ட மல்லப்பா அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு அந்த கம்பி எட்டவில்லை. இதனால் கம்பு போன்று நீளமான ஒரு பொருளை வைத்து அதனை எடுக்க எண்ணியுள்ளார். அதன்படி வீட்டில் இருந்த தரை துடைப்பானை … Read more

மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் குஜராத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? – முதற்கட்ட பார்வை

அகமதாபாத்: டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு கொண்டு வரப்பட்டு குஜராத் ஜனநாயகத் திருவிழாக் கோலம் தரித்துள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தொடர்ச்சியாக 5 முறை … Read more

சிறையில் முன்னாள் அமைச்சருக்கு மசாஜ்: விளக்கம் கேட்கும் உள்துறை!

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை … Read more