கடிதம் எழுதி வைத்துவிட்டு 4 பத்தாம் வகுப்பு மாணவிகள் மாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு வீடு திரும்புவதாகவும், யாரும் தேட வேண்டாம் எனவும், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான 4 மாணவிகளை, போலீசார் தேடி வருகின்றனர். தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள், நேற்று மாலை வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், புகாரின் பேரில் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து மாணவிகளை தேடி வருகின்றனர்.  … Read more

ஆந்திராவில் பலி ஆடு என்று நினைத்து வாலிபரின் தலையை வெட்டிய போதை ஆசாமி

மதனப்பள்ளி: ஆடு என்று நினைத்து வாலிபரின் தலையை வெட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில்  ஊர் எல்லையில் உள்ள எல்லம்மா கோயிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து  ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும்  எல்லம்மா கோயிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர். அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த … Read more

தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட ராகுல்! தெலங்கானாவில் களைகட்டிய ஒற்றுமை யாத்ரா!

தெலங்கானாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பொனாலு பண்டிகையில் பங்கேற்று சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் யாத்திரையை முடித்த ராகுல், தெலங்கானாவில் தற்போது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவின் 57வது நாளில், தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு … Read more

“முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” – அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சவால்

ராஞ்சி: முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பரான மிஷ்ராவையும், மேலும் இருவரையும் அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது. அதோடு, மிஷ்ராவுக்குச் சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 19 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை … Read more

குஜராத் தேர்தல் அரசியலில் பாஜக… கடந்த கால வரலாறு என்ன சொல்கிறது?

குஜராத் மாநிலம் கடந்த 1962ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1980ஆம் ஆண்டு 6வது சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பாஜக முதல்முறை போட்டியிட்டது. அதில் 14.02 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களில் வென்றது. அப்போது பாஜகவிற்கு கிடைத்த இடம் மூன்று. இதையடுத்து 1985ல் 14.96 சதவீத வாக்குகளுடன் 11 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் 1990ல் நடந்த தேர்தல் பாஜக விஸ்வரூபம் எடுத்தது. அப்போது 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜனதா தள் … Read more

குன்னூரில் பெய்து வரும் மழையின் காரணமாக ராஜாஜி நகர் பகுதியில் நிலச்சரிவு

குன்னூர்: குன்னூரில் பெய்து வரும் மழையின் காரணமாக ராஜாஜி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கற்கள் உருண்டு விழுந்ததில் வீட்டிற்குள் சிக்கிய 3 பெண்களை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு | காங்கிரஸின் இமோஜி கருத்துக்கு பாஜக எதிர்வினை

புதுடெல்லி: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூன்று குரங்குகள் இமோஜி மூலமாக தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக எதிர்வினை ஆற்றியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வியாழக்கிழமை (நவ 3) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி வெளியாவதற்கு முன்னரே காங்கிரஸ் … Read more

தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு..!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து, காற்று தரக்கட்டுப்பாட்டு குறியீடு 426 என்ற மிகவும் மோசமான அளவை எட்டியுள்ளது. பக்கத்து மாநிலங்களில் விளைநிலங்களில் எரிக்கப்படும் கழிவுகள், தில்லியில் இயங்கும் வாகனங்களின் புகையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காற்று மாசினால் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதால் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசின் அளவு குறையும் வரையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி … Read more

இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டமன்ற தேர்தல் டிச. 1, 5ம் தேதி நடக்கிறது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிகுந்த பரபரப்பு இடையே இரு கட்டங்களாக குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக அம்மாநில தேர்தலை நடத்துவது அவசியம். குஜராத்தில் கிட்டதட்ட கால் நூற்றாண்டாக பாஜ ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலின்போது மொத்தமுள்ள 182 … Read more

’நீயே காரை ஓட்டு’.. ஜகா வாங்கிய மணமகன்.. மணப்பெண்ணின் டிரைவிங்கால் பறிபோன உயிர்!

வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்தாலும் இந்த வழக்கம் இதுகாறும் பழக்கத்தில் இருந்துதான் வருகிறது. இப்படி இருக்கையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் மணப்பெண்ணின் உறவினர் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது. கான்பூரை அடுத்த எடாவாஹ் மாவட்டத்தில் உள்ள அக்பர்புர் கிராமத்தில் 24 வயதான அருண் குமார் என்பவருக்கும், அவுரையா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்திருக்கிறது. அப்போது மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு காரை வரதட்சணையாக திருமணத்திற்கு முன்பு … Read more