குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று தேர்தல்  ஆணையம் அறிவிக்கிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிடுகிறது. டிசம்பருக்குள் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முடிக்க வேண்டிய நிலையில் இன்று அறிவிக்கப்படுகிறது.

அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூலித்து மோசடி – பெண் பத்திரிகையாளரின் ரூ.1.77 கோடி முடக்கம்

புதுடெல்லி: அறக்கட்டளை பெயரில் மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர் ராணா அயூப் மீது, அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.77 கோடி முடக்கப்பட்டது. உ.பி.யை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்.இவர் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து, நிவாரணப் பணிகளுக்கு மக்களிடம் இருந்து ‘கேட்டோ’ என்ற ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டினார். ஆனால், இந்த நிதியை நிவாரணப் பணிகளுக்கு இவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. பி.எம். … Read more

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள்: இந்த நாட்டில் மருத்துவ படிப்பை தொடரலாம்

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு விடிவெள்ளி தெரிகிறது. உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்றுக் கொண்டிருந்த  மாணவர்களுக்கு, தங்கள் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. உக்ரைனில் இருந்து திரும்பிய 2000 இந்திய மாணவர்கள் எங்கே படிப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் கிடைத்துள்ளது. உக்ரைனில் படித்து வந்த மாணவர்கள், இந்தியாவில் அல்ல, மற்றொரு வெளிநாட்டில் தங்கள் படிப்பை படித்து முடிப்பார்கள். மருத்துவ மாணவர்கள் … Read more

கஞ்சிக்கோடு – வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை

பாலக்காடு: கஞ்சிக்கோடு – வளையாறு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழந்துள்ளது. கன்னியாகுமரில் இருந்து அசாம் செல்லும் விரைவு ரயில் மோதியதில் காட்டுயானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக கேரளா வனத்துறை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலக்காடு, வாளையார், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் தடங்களில் யானைகள் உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிலையில் கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு – வளையாறு இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில்வே … Read more

இந்து மதம் குறித்த சர்ச்சையால் எந்த கட்சிக்கு லாபம்? – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்

புதுடெல்லி: ஒரு காலகட்டத்தில் தேசிய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த 1974-ல் முதன்முறையாக ஜனசங் (தற்போதைய பாஜக) சார்பில் மாநிலங்களவை எம்.பி.யானார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 3 முறை எம்.பி.யாக இருந்தார். தனது ஜனதா தளம் கட்சியை கலைத்து விட்டு ஆகஸ்ட் 2013-ல் பாஜகவில் இணைந்தார். மாநிலங்களவையில் எம்.பி.யாக பாஜக தலைமையிலான அரசு அவரை நியமனம் செய்திருந்தது. தற்போது அந்த பதவிக் காலமும் முடிந்துவிட்ட நிலையில், ‘நான் இப்போது பாஜகவின் … Read more

இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் – 11 இடங்களில் கத்திக்குத்து

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் இனவெறி காரணமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக, அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிட்னியில் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் 28 வயதான இந்தியர் சுபம் கார்க், கடந்த 6ம் தேதி தாக்குதலுக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்ராவில் வசிக்கும் அவரது பெற்றோர், இது இனவெறித்தாக்குதல் எனவும், கடந்த ஏழு நாட்களாக விசாவுக்காக போராடி வருவதாகவும் கூறினர். Source link

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை, இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லி: நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை கொண்டது.

ஹரியானாவில் மசூதியை அடித்து நொறுக்கி அட்டூழியம்.. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்

ஹரியானாவில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தொழுது கொண்டிருந்தவர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் திடீரென்று அத்துமீறி நுழைந்த 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அங்கு தொழுது கொண்டிருந்தவர்களை மிரட்டியதுடன், மசூதியை சேதப்படுத்திவிட்டு சென்ற சம்பவம் பெரும் … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட ராணுவத்தின் மோப்ப நாய் ‘ஜூம்’ உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராணுவத்தின் மோப்ப நாய் ஜூம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்தால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட ‘ஜூம்’ என்ற நாய் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. தெற்கு காஷ்மீரில் பல்வேறு ராணுவ நடவடிக்கையில் இந்த நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனந்தநாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் டாங்பாவா என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமைதீவிரவாதிகளுக்கு எதிரானநடவடிக்கையில் ஜூம் வழக்கம்போல் உதவியது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு ஜூம் காரணமாக இருந்தது. … Read more

எத்தியோப்பியாவில் இருந்து மும்பை வந்த விமானப் பயணியிடம் 16 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணி ஒருவரிடமிருந்து 8கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த அந்த இந்தியப் பயணி தனது இடுப்புப் பட்டையில் 16 கிலோ எடையுடைய தங்கக்கட்டிகளைக் கட்டி வந்துள்ளார். தங்கக்கட்டிகளை மறைக்கும் வகையில் இடுப்புப் பட்டி வடிவமைக்கப்பட்டிருந்தாகவும், சோதனையின் போது  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் Source link