நெருங்கும் தீபாவளி பண்டிகை!: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும்.. அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு..!!

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் விமர்சையாக வருடாவருடம் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் ஒன்றிய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அமைச்சர் அனுராக் தாக்கூர் … Read more

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கு-பதிலளிக்க 2 வாரம் அவகாசம் கோரிய மத்திய அரசு

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அரசியலமைப்பு அங்கீகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் கோரியது மத்திய அரசு. அக்டோபர் 31ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் 1991ம் ஆண்டு மத வழிபாட்டு தளங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத்தலங்களின் மீது யாரும் உரிமை கோர முடியாது என அறிவிக்கப்பட்டது. … Read more

குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புக்கு தடை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 69 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த நிறுவனத்தின் 4 மருந்துகளுடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் … Read more

இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பு: தொடங்கி வைக்கிறார் அமித்ஷா

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பை அக்டோபர் 16ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைக்கிறார்.

கேரள நரபலி சம்பவ வழக்கு | நரமாமிசம் சாப்பிட்டார்களா? – போலீஸ் சந்தேகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவ வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தம்பதியால் நடத்தப்பட்ட நரபலி சம்பவம், அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எலந்தூரை சேர்ந்தவர்கள் பகவல் சிங், லைலா. மாந்திரகத்தில் நம்பிக்கை கொண்ட இவர்கள் விரைவில் பணக்காரர்களாக வேண்டி இரு பெண்களை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு தரகர் முகமது … Read more

நரபலி எப்படி நடந்தது? விசாரணையில் திடுக்… நடுவுல செம சண்டை; காண்டான கேரள நீதிபதிகள்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பக்வால் சிங். இவரது மனைவி லைலா. பக்வால் சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்பட்டவர். இந்நிலையில் காலடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்று வந்தவர் 49 வயது பெண் ரோசிலின். இவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் இவரது மகள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று, தனது தாய் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். … Read more

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: பிரமானபத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் அரசுக்கு அதிகாரம் உள்ளதா? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விரிவான பிரமானபத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள் சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில், “அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற … Read more

தலித் மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும்: அம்பேத்கரும் இஸ்லாமும்!

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அதில், அம்பேத்கர் கிறித்தவ மதத்திற்கு மாறாமல் ஏன் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அந்தவகையில், தலித் மக்கள் தமக்கான ஆதரவைத் திரட்டவேண்டும் அதற்கு மதமாற்றம்தான் ஒரே வழி என்று அம்பேத்கர் … Read more

மகராஷ்ட்ரா முதலமைச்சர் ஷிண்டே அணிக்கு இரண்டு வாள்கள், கேடயம் சின்னம்..

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர் சிவசேனா அணிக்கு இரண்டு வாள், கேடயம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பாலாசாகேப் ஆன்ச்சி சிவசேனா என்று கட்சிக்குப் புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மூன்று சின்னங்களில் ஒன்றுக்கு அங்கீகாரம் கோரி ஷிண்டே தரப்பில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டிருந்து. இதில் இரண்டு வாள்கள் கேடயம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்துடன் அக்கட்சி இனி அந்தேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று உறுதியாகிறது.இதே போன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினருக்கு தீப்பந்தம் சின்னம் … Read more