கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?

Kerala, Pathanamthitta: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் லாட்டரி விற்று வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் காணாமல் போய்விட்டதாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி போலீஸில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து அப்பெண்ணின் செல்போன் சிக்னல் கடைசியாக செயலில் இருந்த இடம் குறித்து போலீஸார் விசாரித்து அவ்விடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட போலீஸாரின் விசாரணையில், சீக்கிரம் பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இரு பெண்களை நரபலி கொடுத்த … Read more

கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்!: சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.. ஸ்தம்பிக்கும் மக்கள்..!!

கொப்பல்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக கொப்பம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கொப்பல் மாவட்டத்தில் விடாது கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டது. தாம்பூர் அருகே கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதையும் மழைநீர் வியாபித்திருக்கிறது. சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சிக்கி வருகின்றன. இந்நிலையில் … Read more

”ஒற்றுமை யாத்திரையில் ஒருநாள் பங்கேறுங்கள்…”- லாலு பிரசாத் யாதவை அழைக்கும் காங்கிரஸ்!

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் சேராத கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என லாலு பேசியதை சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ்ஸில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் சேராத கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ள நிலையில், அவரை தங்கள் கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள … Read more

இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட ALH MK-III ஹெலிகாப்டர்…

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன ALH MK-III ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது. சுய சார்பு இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 15-வது இலகுரக ஹெலிகாப்டர் ALH MK-III, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது. Source link

இந்தியாவில் ஒரே நாளில் 2,139 பேருக்கு கொரோனா… 13 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 2,139 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,18,533 ஆக குறைந்தது. * புதிதாக 13 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

`2021-ஐ விட 2022-ல் 92% அதிக வருவாய்!’ மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் #VideoStory

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதுவரையிலான இந்த ஆண்டில் ரயில்வே துறையில் 92 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.17,394 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை 33 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை … Read more

உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் புனரமைப்பு – நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

உஜ்ஜைன்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலின் முதல் கட்டப் புனரமைப்புபணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த கோயிலை `மகா காலேஸ்வர் லோக்’ என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவுசெய் யப்பட்டது. இதற்கான நிதியை மத்திய … Read more

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அக்.17ந் தேதி திறப்பு..!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை இந்த மாதம் 17 ஆம் முதல்  22 ஆம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதன் பின் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பர் மாதம 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு போது பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்திட  தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் … Read more

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: ஒன்றிய நிதியமைச்சர் தகவல்

வாஷிங்டன்: இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண்… அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய உடல்!

கேரள மாநிலத்தில் தருமபுரியை சேர்ந்த பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாய் வெளியான தகவலை அடுத்து அப்பெண்ணின் கிராமம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. கேரள மாநிலத்தில் தமிழக பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் தருமபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணே நரபலி கொடுக்கப்பட்டவர் என முதலில் தகவல் வெளியானது. பத்மா தருமபுரி மாவட்டத்தில் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், நாகவதி அணை … Read more