இந்தியாவுடன் இணைந்து செயல்பட முழு உலகமும் விருப்பம்: பிரதமர் மோடி பேச்சு

மண்டி: ‘நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான அடித்தளத்தின் காரணமாக, மொத்த உலகமும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரங்களை பிரதமர் மோடி நலத் திட்டங்களை தொடங்கி வைத்து செய்து வருகிறார். இந்நிலையில், இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் பாஜ யுவ மோர்ச்சா சார்பில் இளைஞர்கள் பேரணி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று … Read more

பிழைப்பார் என ஒன்றரை ஆண்டாக கணவர் சடலத்தை பாதுகாத்த மனைவி

கான்பூர்:  உத்தரப் பிரதேசத்தில் இறந்த கணவரின் உடலை, ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் மனைவி பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்தவர் விம்லேஷ் தீட்சத். வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்தாண்டு ஏப்ரலில், உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இறந்தார். அவருடைய உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அதை தகனம் செய்யவில்லை. விம்லேஷ் கோமாவில் இருப்பதாகவும், திரும்ப வருவார் என்றும் நம்பினர். அவருடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர். … Read more

யுஏபிஏ சட்டம் – ஒரு பார்வை

தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, யுஏபிஏ சட்டம் கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தீவிரவாத செயலுக்காக ஆட்களை யார் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இச்சட்டப்படி ஒருவர் மீது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும். கருப்பு சட்டம்.. – யுஏபிஏ சட்டம் குறித்து … Read more

ராஜஸ்தான் முதல்வர் ஆகிறார் சச்சின் பைலட் – வழி விடுகிறார் அசோக் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இளம் தலைவர் சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், காந்தி குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட மறுத்துள்ளனர். அவர்களிடம், மூத்தத் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. … Read more

திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் தீ விபத்து: 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதி அருகே ரேணிகுண்டாவில் தனியார் மருத்துவமனை மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி சிறுவர்கள் பரத் ரெட்டி, கார்த்திகா  ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ரேணிகுண்டா பிஸ்மில்லா நகரில் மருத்துவர் சிவசங்கர் ரெட்டி மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை மாடியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் குடும்பத்தினர் சிக்கி கொண்டனர்.

‘ஜி-23’ தலைவர்கள் நினைத்தது நடந்தது – காங். தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு படிவம் வாங்கினார் சசி தரூர்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடவடிக்கை தொடங்கியது. தேர்தலில் போட்டியிட சசி தரூர் எம்.பி. வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக் கொண்டார். அசோக் கெலாட் விரைவில் மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகிய பிறகு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பேற்றார். அதன் பிறகு நடைபெற்ற மாநில தேர்தல்கள் மற்றும் 2019-ல் … Read more

நவராத்திரி பரிசாக மின் கட்டணம் உயர்வு – மாஜி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு!

நவராத்திரி பரிசாக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரிக்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தி அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மக்களுக்கு நவராத்திரி பரிசாக இந்த மின்கட்டண உயர்வை அரசு வழங்கி உள்ளது. மாநிலத்தில் … Read more

ரூ.167 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்

அய்சால்: மியான்மர் எல்லையில் ரூ.167.86 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ், மிசோரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, மிசோரம் போலீசாரும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நேற்று முன்தினம் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்டத்தின் மெல்பக் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை நிறுத்தி வீரர்கள் சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் மெத்தபென்டமைன் என்ற போதை மருந்து … Read more

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் – ராகுல் காந்தி

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன், 19 வயது பெண்ணை கொலை செய்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி இவ்வாறு கூறியுள்ளார். ஹரித்துவாரில் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் வரவேற்பாளராக இருந்த 19 வயது பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

கொச்சியில் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேருக்கு செப். 30-ம் தேதி வரை என்ஐஏ காவல்

கொச்சி: கொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினர் 11 பேரை இம்மாதம் 30-ம் தேதி வரை என்ஐஏ காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தமிழகம், கேரளா, உட்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 45 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கைது … Read more