நகரங்களின் வளர்ச்சிக்காக செயல்படுங்கள் – பாஜக மேயர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ள வேண்டாம். நகரங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி மட்டும் செயல்படுங்கள் என்று பாஜக மேயர், துணை மேயர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். பாஜகவை சேர்ந்த மேயர், துணை மேயர்களின் 2 நாள் மாநாடு குஜராத்தின் காந்திநகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: சர்தார் வல்லபபாய் படேல் அகமதாபாத் நகர மேயராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவரது பதவிக் காலத்தில் அகமதாபாத் அபரிமிதமான … Read more

மேயர்களுக்கு மோடி அறிவுரை: தேர்தல் வெற்றியை மட்டும் குறிவைத்து செயல்படக்கூடாது

அகமதாபாத்: ‘மேயர்கள் அடிமட்ட அளவில் இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாக வைத்து செயல்படக் கூடாது’ என பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தேசிய அளவிலான 2 நாள் மேயர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே வீடியோகான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்து பேசியதாவது: மேயர்கள் … Read more

ரிஷிகேஷ் எய்ம்சில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் துவக்கம் – அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

ரிஷிகேஷ் எய்ம்ஸ்சில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செயல்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். ஒற்றை என்ஜின் அல்லது இரட்டை என்ஜின் கொண்ட ஹெலிகாப்டர்கள் வழங்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்களுக்கான விருப்பத்தை மத்திய அரசு எதிர்பார்த்திருப்பதாக கூறினார். Source link

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இஸ்லாமிய தம்பதி ரூ1.2 கோடி நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான சுபினாபானு மற்றும் அப்துல்கனி ஆகியோர் ரூ1.2 கோடி நன்கொடையாக வழங்கினர். இந்த நன்கொடை காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயல் அதிகாரி தர்மாவிடம் வழங்கினர். இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ15 லட்சமும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட பத்மாவதி ஓய்வறையில் ரூ87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் … Read more

டிஎன்பிஎஸ்சி.யில் பதவி உயர்வு: தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: டி.என்.பி.எஸ்.சியில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கால அவகாச கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண், சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நிலை … Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; கர்நாடகாவில் பதுங்கிய 2 தீவிரவாதிகள் கைது: மற்றொருவர் தலைமறைவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாநகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் தங்கி இருந்த பாழடைந்த கட்டிடத்தை போலீசார் நேற்று காலை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், எலெக்ட்ரானிக்  பொருட்கள், டைரி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதாவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்த இன்ஜினியர்  சையத் யாசின் (22), மங்களூரு மாவட்டத்தை சேர்ந்த மாஸ் முனீர் அகமது (22) … Read more

தனது அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சென்னை டாக்டரை கொன்ற காதலி

* அரை மணி நேரம் சரமாரி அடி * தப்பிய மேலும் ஒருவருக்கு வலை பெங்களூரு: பெங்களூருவில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, காதலனை  தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த டாக்டர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப் படிப்பை  முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர்  தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

காங். தலைவர் பதவிக்கு சசிதரூர், கெலாட் போட்டி; ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு: தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியீடு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூர், அசோக் கெலாட் தயாராகி உள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிக்கிறார். இந்நிலையில், புதிய கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ … Read more

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தது சமத்துவத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவ கொள்கைக்குள் வகைப்படுத்த முடியாது,’  என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, … Read more

நொய்டாவில் சுவர் இடிந்து 4 பேர் பரிதாப பலி

நொய்டா:  உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே கால்வாய் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். … Read more