ராணுவ தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 ராணுவ அணிவகுப்பை தலைநகர் டெல்லிக்கு வெளியே மாற்ற இந்திய ராணுவம் முடிவு

டெல்லி: ராணுவ தினத்தை முன்னிட்டு  (ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ) நடைபெறும் ராணுவ அணிவகுப்பை தலைநகர் டெல்லிக்கு வெளியே மாற்ற இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ராணுவ தின அணிவகுப்பு Southern Command area பகுதியில் நடைபெறும் என  இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

’’சம்பளம் இல்லை’’ மேனேஜர் நம்பரை கேட்ட டிரைவரை கொடூரமாக தாக்கிய பெண்கள் – வைரலாகும் வீடியோ

ராய்ப்பூர் விமான நிலையத்தின் வெளியே பெண்கள் கூட்டம் ஒரு இளைஞரை இரக்கமற்ற முறையில் கொடூரமாக அடித்து தாக்கும் வீடியோ இணையங்களில் வைரலாக பரவிவருகிறது. ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை வேடிக்கைப் பார்த்த நபர்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், பணத் தகராறு காரணமாக மிகவும் கோபமாக இருக்கும் பெண் ஒருவர் ஒரு ஆணை பெல்ட்டால் அடிப்பதும், தொடர்ந்து பலமுறை கன்னத்தில் அறைவதும், குத்துவதும் பதிவாகி இருக்கிறது. மேலும் அந்த … Read more

கட்சியில் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக சசி தரூர் டிவீட் – உடனடியாக அழைத்த சோனியா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் … Read more

புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி. : இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கக் கூடியவர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த 2009-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், பின்னர் 2010-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  தனது தொகுதியான கிருஷ்ணாநகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியைப் பார்வையிடச் சென்ற அவர், அங்கு தானும் கால்பந்து விளையாடிய புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

மும்பை பிலிம் சிட்டியில் சிறுத்தை குட்டி மர்ம சாவு: வனத்துறை விசாரணை

மும்பை: மும்பை பிலிம் சிட்டியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரான கோரேகானில் ஃபிலிம் சிட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு சினிமா ஷூட்டிங் நடத்தப்படும். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு ெசன்ற வனத்துறையினர், ஃபிலிம் சிட்டியில் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். … Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பட்டியலின சிறுமி – உ.பியில் மீண்டும் ஒரு அவலம்

உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து தலித் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையும் ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  உத்திர பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் , மின்துறையில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் ஊழியரான இவர் தனியாக ஒரு ஸ்வீட் கடையும் நடத்தி வருகிறார்.கடந்த சனிக்கிழமை, தனது ஸ்வீட் கடைக்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு தலித் சிறுமி தனியாக இருப்பதைக் கவனித்தவர், … Read more

மது போதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் பகவந்த் மான்: சுக்பிர் சிங் பாதல் குற்றச்சாட்டு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிகமாக மது குடித்துவிட்டு விமானத்தில் ஏறியதால், அவர் இறக்கிவிடப்பட்டதாக செய்தி வெளியாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் … Read more

'ஜெய் ஜெய் யோகி பாபா..!' அயோத்தியில் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில்!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவரின் தொண்டர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அயோத்தியில் உள்ள மவுரியா கா பூர்வா என்னும் கிராமத்தில், 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள 32 வயதான பிரபாகர் மவுரியா என்பவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டி உள்ளார். … Read more

video: அப்பாவி நாயை பாடாய்படுத்திய டாக்டர் – இதுக்குதானா…?

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர் டாக்டர் ரஜ்னீஷ் கால்வா. அரசு மருத்துவரான இவர், தனது காரில் நாயை சங்கிலியால் கட்டி சாலையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து, இந்த வீடியோ பலரும் பகிரப்பட்டு, இதற்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  … Read more

திருமணமாகி 5 ஆண்டாகியும் குழந்தை பிறக்காததால் ஒரே சேலையில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை: கர்நாடகாவில் சோகம்

சிக்கபள்ளாப்பூர்: கர்நாடகாவில் திருமணமாகி 5 ஆண்டாகியும் குழந்தை பிறக்காததால் மனமுடைந்த தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த சலகுண்டே கிராமத்தை சேர்ந்த தம்பதி சந்திர சேகர் (32), சசிகலா (23) ஆகியோருக்கு திருமணமான 5 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இதனால் மனம் விரக்தி அடைந்த நிலையில் இருந்த தம்பதியினர், நேற்று அவர்களது வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார் … Read more