திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

டெல்லி: திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

லக்னோ: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். … Read more

தலைமை நீதிபதி யு.யு.லலித் புதிதாக அறிமுகம் செய்த வழக்கு பட்டியலிடும் புதிய நடைமுறையால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அதிக அளவில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, புதிய நடைமுறையை தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிமுகம் செய்தார். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், உச்ச நீதிமன்றத்தின் 30 நீதிபதிகள், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமர்ந்து ஒவ்வொரு அமர்விலும் உள்ள பொதுநல வழக்குகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இதர வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான மூன்று … Read more

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது உயர்வு – பார் கவுன்சில் பச்சைக்கொடி!

உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை முறையே 65, 67 ஆக உயா்த்த இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைமையிலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. தற்போது விசாரணை நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது முறையே 60, 62, 65 ஆக உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில வழக்கறிஞர்கள் சங்கம், உயா் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிா்வாகிகள், இந்திய பாா் கவுன்சில் … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் அண்டை நாட்டில் படிப்பை தொடர நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ இணையதளத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.

நமிபியா சிவிங்கிப் புலிகளின் ஃப்ர்ஸ்ட் லுக்

புதுடெல்லி: சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகப்படுத்தும் திட்டத்தின் மூலமாக நமிபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட இருக்கும் நிலையில் அவற்றின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த 1952-ல் இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. கடைசியாக சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் சால் வனப்பகுதியில் 1948-ல் ஒரு சிவிங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது தான் இந்தியாவின் கடைசி சிவிங்கியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, சிவிங்கிப்புலி மறுஅறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு … Read more

சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதி முடக்கம்

டெல்லி: சீன கடன் செயலி விவகாரத்தில் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. ஏற்கனவே சோதனை நடந்த நிலையில் Easebuzz, Razorpay, Cashfree, Paytm நிறுவனத்தின் ரூ.46.67 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலகத்துக்கு அம்பேத்கரின் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்துக்கு ஹைதராபாத்தில் புதிதாகக் கட்டப்படும் தலைமை செயலக பணிகளை நேற்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க் கையில் ஒளி ஏற்றி வைத்த டாக்டர் அம்பேத்கரின் பெயரே புதிய தலைமை செயலகத்துக்கு சூட்டப்படும். சட்டத்தை இயற்றும் இடத்தில் அம்பேத்கரின் பெயரை சூட்டுவதே நியாயமானதாகும். இது நம் நாட்டுக்கே முன்னு தாரணமாக திகழ வழி வகுக்கும். அனைத்து தரப்பு மக்களும் கவுரமாக வாழ வேண்டும் … Read more

டெல்லியில் அம்பேதகரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்விரர்களின் நடவடிக்கை: நூல் வெளியிட்டு விழா

டெல்லி: அம்பேதகரும்-மோடியும் சீர்திருத்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல்விரர்களின் நடவடிக்கையும் என்ற நூல் டெல்லியில் இன்று வெளியிட்டனர். டெல்லியில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நூலை வெளியிட்டார். நூல் வெளியிட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகமதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு

குஜராத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி பாஜக வசம் இருந்து வருகிறது. அகமதாபாத்தின் மணி நகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, தற்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா் … Read more