பிஎஃப்ஐ நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் கையேடு கண்டுபிடிப்பு – என்ஐஏ அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத அமைப்புகளின் சி.டி.க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது போன்ற ஒரு ஆவணம், உத்தர பிரதேசத்தில், பாராபங்கி என்ற இடத்தில் பிஎஃப்ஐ … Read more

காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்துகளில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயம்

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்துகளில் மர்ம பொருள் வெடித்தது. டொமைல் சவுக் என்ற இடத்தில் நேற்றிரவு 10.45 மணிக்கு பேருந்து ஒன்றில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்தில் மர்மப்பொருள் வெடித்தது.

"நான் வெஜ் ஆண்களுடன் செக்ஸ் வேண்டாம்" : பீட்டா!!

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டா அமைப்பு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீட்டா அமைப்பு, மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் பீர் பாட்டில்களுடன், அசை உணவை சாப்பிடுவார்கள். மாமிசத்தை சாப்பிடுவதன் மூலம் தனது … Read more

முதல்வர் கெலாட் ஆதரவு அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவெடுத்துள்ளார். அசோக் கெலாட் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இது தொடர்பாக கருத்து கேட்க, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 82 பேர், சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும், காங்கிரஸ் … Read more

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி நியமனம்

டெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை குடியரசு தலைவர் நியமனம் செய்தார். இவர் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

அடித்தது ஜாக்பாட்… அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 7ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், தற்போதுள்ள சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு, 3 மாத அரியர் தொகையுடன் வழங்கப்படும். முன்னதாக, மார்ச் 2022இல், … Read more

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் – ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இணைந்து செயல்படுவதற்காக, முப்படை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில், தமிகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே … Read more

கேரளாவில் வணிக வளாகத்தில் இளம் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்: வாலிபரின் கன்னத்தில் பளார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மாலில் நடந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் 2 பேரிடம்  சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் மலையாளத்தில் வெளியான ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள மாலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், இந்த சினிமாவில் நடித்த 2 இளம் நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை பார்க்க, ரசிகர்கள் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து 2 நடிகைகளும் திரும்பியபோது, சிலர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இது … Read more

தடை விதிக்கும் முன்பு முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசித்த மத்திய அரசு

புதுடெல்லி: பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். அதற்கு முன்னதாக கடந்த 17-ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அஜித் தோவல் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள், தியோபந்தி, பரெல்வி மற்றும் சூபி செக்ட்ஸ் ஆப் இஸ்லாம் உள்ளிட்ட மிகப்பெரிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பிஎஃப்ஐ மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. … Read more

பங்கு சந்தை மோசடி சித்ரா, ஆனந்துக்கு ஐகோர்ட் ஜாமீன்

புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், தேசியப் பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை முன்கூட்டியே பங்கு நிறுவனங்களின் சர்வரிலிருந்து எடுக்க உதவியதாகக் கூறப்படும் ‘கோ-லொக்கேஷன்’ ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் கைது செய்தது. தற்போது, திகார் சிறையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. … Read more