டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காவல்துறை அனுமதியுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலை சிங்காரவேலு சிலைக்கு சென்றடையும். இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலு சிலை அருகே ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று … Read more

ரூ.1,476 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது

மும்பை: மும்பை வஷி பகுதியில் லாரி ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்தது. அதனை மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர். அதில், இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுகளை கொண்ட பெட்டிகள் இருந்தன. ஸ்பெயினின் வலன்சியா நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆரஞ்சு பழங்கள் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அதில் அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆரஞ்சு பெட்டிகளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்தாம்பெட்டமைன் மற்றும் 9 கிலோ எடையுள்ள அதிக தூய்மையான கோகைன் என்ற … Read more

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

புதுச்சேரியில் வேலைநிறுத்தம் செய்து வரும் மின்துறை ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டித்ததால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டு புதுவை மக்கள் தவித்துப் போயினர். மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, மின்துறை ஊழியர்கள் நேற்று 4 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் மாலையில் வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மின்சார வயர்களையும் துண்டித்தனர். இதனால் ஊரே இருளில் … Read more

காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லி ராஜகாட்டில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

அந்தரங்க உறுப்பில் ஷாக் – போலீஸ் மீது பகீர் புகார்!!

விசாரணை என்ற பெயரில் தனது அந்தரங்க உறுப்பில் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததாக பட்டியலின இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூரு காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் பட்டியலின இளைஞர் ஒருவர் தன்னை காவல்துறையினர் விசாரணை என்ற அழைத்து சென்று சித்திரவதை செய்ததாக புகாரளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 4ஆம் தேதி பெங்களூரு பி.நாராயணபுரா பேருந்து நிலையத்திலிருந்து தன்னை காவல்துறையினர் காரில் ஏற்றிக்கொண்டு காவல் … Read more

மக்கள் முன் விழுந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் – ஏன் தெரியுமா?

குஜராத்தில் பல கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி அங்கிருந்து பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி கோவிலில் தரிசனம் செய்தார். இரவு 10 மணிக்கு ராஜஸ்தானில் அபு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைச் சந்திக்க வந்திருந்தார் . தாமதமாக வந்ததற்கு பிரதமர் மேடையில் மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். மேலும் 10 மணிக்கு மேல் விதிமுறைப்படி அதிக ஓசையை எழுப்பக் கூடாது என்று மைக் இன்றி மக்களிடம் உரையாடினார். மீண்டும் வந்து மக்களைச் … Read more

பாஜ அரசை விமர்சித்து வந்த மேகாலயா ஆளுனர் மாலிக் ஓய்வு: அருணாச்சல் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி: மேகாலயா மாநில ஆளுநராக இருந்து வருபவர் சத்யபால் மாலிக், இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். ஆளுநரான சத்யபால் மாலிக், ஒன்றிய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார். அதே போல்  அக்கினி வீரர்கள் திட்டம்  உள்ளிட்ட ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சித்தது சர்ச்சையானது. இந்நிலையில், ஆளுனராக இருந்து கொண்டு பாஜ அரசை விமர்சனம் செய்து வந்த சத்யபால்  நாளை … Read more

டெல்லியில் அதிரடி அறிவிப்பு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் தான் பெட்ரோல்

புதுடெல்லி: டெல்லியில் வருகின்ற 25ம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் தான் வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 29ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்து குறித்தும் … Read more

அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியரால் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் பூட்டிய ஊழியர்கள்!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் … Read more