ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவரை ஜேசிபி-யில் தூக்கிச் சென்ற பரிதாபம்

போபால்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கியவரை ஜேசிபி வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை, ஜேசிபி வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததை அடுத்து, விபத்தில் சிக்கிய அந்த இளைஞனை ஜேசிபி வாகனம் மூலம் அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஜேசிபி-யின் மண் … Read more

மகாராஷ்டிரா: வாடகை கேட்ட கடை ஓனர்! 30 நண்பர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய வாடகைதாரர்!

மகாராஷ்டிராவில் வாடகை கேட்ட கடை உரிமையாளரை, வாடகைதாரர் ஒருவர் தனது 30 நண்பர்களுடன் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள விடல்வாடி பகுதியில் இயங்கி வந்த ‘ஆஷா சோப்ஸ்’ என்ற கடையின் உரிமையாளர் முகேஷ் வாத்வா. இவர் இந்த கடையை சஞ்சய் குப்தா என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். ஆனால் சஞ்சய் குப்தா சரியான நேரத்திற்கு வாடகை தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடை வாடகைய செலுத்தாது குறித்து உரிமையாளர் … Read more

உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் – பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே

ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் … Read more

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு..! – பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் ..!

மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென்று என்ஜினிலிருந்து புகை வெளியேறியது. இதனால்அவசர கால வழியின் மூலம் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் . விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மஸ்கட்டிலிருந்து கொச்சி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென்று தீ பிடித்தது. அதில் இருந்த சுமார் 145 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கட்டிடத்திற்கு கொண்டு செல்ல பட்டனர். சில தினங்களுக்கு … Read more

பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு; ஐ.டி. நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ்

பெங்களூரு: பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள பல ஐ.டி. நிறுவனங்களின் கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் அடைந்துள்ளது.

ம.பி: விபத்தில் சிக்கியவர் ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவலம்!

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய ஒருவர் ஜேசிபி இயந்திரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு வராததால் ஜேசிபி இயந்திரத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிவரை ஏற்றிச் செல்ல அப்பகுதி மக்கள் முடிவு … Read more

‘சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர கி.மீட்டரை தாரை வார்த்துக் கொடுத்த பிரதமர் மோடி’ – ராகுல் காந்தி

புதுடெல்லி: எல்லையில் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ள 1000 சதுர கிலோ மீட்டரை இந்திய அரசு எப்படி மீட்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர கிலோ மீட்டரை இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஏப்ரல் 2020-க்கு முன்னர் இருந்த நிலவரப்படி எல்லையை வரையறுக்க சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய … Read more

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கிறார்

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு லண்டனுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு காலமானார். பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக காலம் ராணியாக வாழ்ந்து மறைந்தவர் இரண்டாம் எலிசபெத். இவரது மறைவு, பிரிட்டன் முழுவதும் சோகக் கடலை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, … Read more

வேகமாக பரவுகிறது ஓமிக்ரானின் புதிய வகை BA.4.6: உஷார் மக்களே!!

லண்டன்: மக்களே உஷார்!! வேகமாக பரவி வருகிறது கோவிட் தொற்றின் மற்றொரு வகை!! அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரானின் துணைவகையான BA.4.6, தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) கோவிட் மாறுபாடுகள் குறித்த சமீபத்திய சுருக்கமான ஆவணம், ஆகஸ்ட் 14 -ல் துவங்கிய முதல் வாரத்தில், இங்கிலாந்தில் BA.4.6 மாதிரிகள் 3.3 சதவீதமாக இருந்தன என்று குறிப்பிட்டது. இதேபோல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கைகளில் … Read more

திருப்பதி அருகே ஆதரவின்றி தவித்த 2 தமிழக சிறுவர்கள் மீட்பு

காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் ரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 சிறுவர்கள் அழுது கொண்டிருந்தனர். தகவலறிந்து கூடூர் நகர போலீசார் விரைந்து சென்று 2 சிறுவர்களையும் மீட்டனர். பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிறுவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள், சச்சின், சூரஜ் என தெரியவந்துள்ளது. இருவரும் தமிழில் பேசுகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து ரயிலில் வந்தபோது எதிர்பாராத விதமாக வழி தவறியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். … Read more