ஞானவாபி மசூதி விவகாரத்தில் இந்து பெண்கள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

லக்னோ: ஞானவாபி மசூதி விவகாரத்தில் இந்து பெண்கள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரணாசி கோர்ட் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிச்சுவரில் இந்து கடவுள்களை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

1098 இல்லை; புகார்களுக்கு இனி குழந்தைகள் 112 எண்ணையே அழைக்க வேண்டும்

புதுடெல்லி: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைத்துள்ளது. இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற அனைத்துவிதமான அவசர அழைப்புகளுக்கான எண்ணுடன் இணைக்க இருக்கிறது. 112 … Read more

உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை, ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கிறது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தி நாள் இன்று கொண்டாடப்படும் வேளையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நர்சரி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைதான பஸ் ஓட்டுநரின் வீட்டை இடித்த அதிகாரிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மூன்றரை வயது நர்சரி செல்லும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட பள்ளி பேருந்து ஓட்டுநரின் வீட்டை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர். கடந்து செவ்வாய்க்கிழமை அன்று, போபாலில் உள்ள முன்னணி தனியார்ப் பள்ளியில் நர்சரிக்கு செல்லும் சிறுமி, பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுமி வீடு திரும்பியதும், குழந்தையின் உடைகளை யாரோ மாற்றியதை அவரது தாயார் கவனித்துள்ளார். பின்னர் தாய் தனது மகளின் வகுப்பு … Read more

இந்தி தினம் கொண்டாட க‌ன்னட அமைப்பினர் எதிர்ப்பு

பெங்களூரு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு செப்டம்பர் 14‍-ம் தேதியை ‘இந்தி மொழி நாள்’ (இந்தி திவஸ்) என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடகாவில் இந்தி மொழி நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை (இன்று) இந்தி மொழி தினத்தை கர்நாடக அரசு சார்பில் கொண்டாடுவதற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஜத மூத்த தலைவர் குமாரசாமி முதல்வர் … Read more

கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

பனாஜி: கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அம்மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் காந்தி ஜெயந்தி வரை மக்கள் சேவை விழாவாக கொண்டாட மகாராஷ்டிர மாநில அரசு முடிவு

மும்பை: பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழாவாக கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்குப்பின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழா கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் … Read more

ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்

அகமதாபாத்: ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தின் ஜகாவு பகுதியில் இருந்து 6 நாட்டிகல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம்: பாஜக-வினரால் கடுமையாக தாக்கப்பட்ட காவல் உதவி ஆணையர்! அச்சுமூட்டும் வீடியோ

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், பாரதிய ஜனதா பேரணி, வன்முறையில் முடிந்தது. இதில் காவல்துறையினரும் கடுமையாக தாக்கப்பட்டனர். மேற்குவங்க அரசை கண்டித்து புதிய தலைமைச்செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில், நார்த்24 பர்கானாஸ், ‘ஹவுரா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆயினும் தடுப்புகளை மீறி பேரணியாக வந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் ஏற்பட்டது. தடுப்புகளை மீற முற்பட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு கலைக்கப்பட்டனர். வன்முறை … Read more

திரிணமூல் அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைக்கிறது என்று கூறி நபானா அபிஜான் பேரணிக்கு (தலைமைச் செயலகம் நோக்கி பேரணி) பாஜக அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக தலைவர்கள் ஹவுரா பகுதி அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் தலைமைச் செயலகம் அருகே வந்தபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தலைமைச் … Read more