பெங்களூரு | நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய 3 கி.மீ ஓடி மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்

பெங்களூரு: பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான கதையாகிவிட்டது. அதுவும் மழைக்காலங்களில் பெங்களூரு போக்குவரத்து இன்னும் கடினமான சவால் என்பது உலகமறிந்த விஷயம். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பெங்களூரு மழை, வெள்ளத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மருத்துவர் ஒருவர் அதில் மாட்டிக் கொண்டார். குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்று கடமையை நிறைவேற்றியுள்ளார். … Read more

டெல்லியிடம் சரண் அடைய மாட்டேன் சரத் பவார் ஆவேசம்

புதுடெல்லி: ‘டெல்லி ஆட்சியாளர்களிடம் சரண் அடைய மாட்டேன்,’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  8வது தேசிய கூட்டம் டெல்லியில் நேற்று  நடந்தது. இதில், கட்சியின் தலைவர் சரத் பவார் பேசுகையில், ‘ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜ, அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து போராட வேண்டும்.  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் ராவுத், நவாப் … Read more

பீகார் கல்லூரி மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் மோடி, தோனி படம் இடம்பெற்றதால் சர்ச்சை!

பீகாரில் கல்லூரி மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, எம்.எஸ்.தோனி புகைப்படங்கள் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் உள்ளது லலித் நாராயணன் மிதிலா என்ற பல்கலைக்கழகம். இதனுடன் இணைந்த மூன்று கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் சிலவற்றில் பிரதமர் மோடி, தோனி, பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான் புகைப்படங்கள் இடம்பெற்றது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக … Read more

டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 160 என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை.!

தேசியப் புலனாய்வு அமைப்பின் 160 அதிகாரிகள் டெல்லி, என்.சி.ஆர், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மூன்று பேர் மேற்குவங்கம் நேபாளம் எல்லையருகில் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் நேபாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவன் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட சதி பற்றி வாக்குமூலம் அளித்துள்ளான். தொடர்ந்து … Read more

எர்ணாகுளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மூணாறில் இருந்து எர்ணாகுளம் சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 50 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் ராகுல் காந்தி 6-வது நாளாக நடைபயணம்!

திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 6-வது நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கேரளாவில் ராகுல் காந்தி 2-வது நாளாக இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளப்டுள்ளர்.

`தேசியக் கட்சியை விரைவில் தொடங்க உள்ளேன்‘- தெலங்கானா முதலமைச்சர் தகவல்

தேசியக் கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமாக சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரையும் இவர் சந்தித்துப் பேசியிருந்தார். இதேபோல் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள … Read more

ஆயிரம் பேருந்து வாங்கவே இல்லை நடக்காத முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவு: டெல்லி ஆளுநர் உத்தரவால் சலசலப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடந்த பேருந்து கொள்முதல் ஊழல் பற்றி சிபிஐ விசாரிக்க அம்மாநில ஆளுநர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையால் தனியார் ஆதாயம் அடைவதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் பாஜ குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் சிசோடியா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி களமிறங்குவதை தடுக்கவே ஒன்றிய அரசு இப்படி செய்வதாக டெல்லி … Read more

ஞானவாபி மசூதியில் வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உத்தரப்பிரதேசம்: ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக்கோரி இந்து மதத்தை சேர்ந்த 5 பெண்கள் தொடர்ந்த வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. வழக்கு விசாரணை உகந்ததா என்பதை முடிவு செய்ய வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய வனத்துறையினர்!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது ஏறி வனத்துறையினர் பரிதவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆராளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரை காட்டு யானை ஒன்று திடீரென துரத்தியது. இதனால் உயிருக்கு அஞ்சி ஓடிய அந்த வன ஊழியர்கள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து உயிர் தப்பினர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்த பின்னரே … Read more