பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு

டெல்லி: பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்து மத பண்டிகையான துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், துர்கா பூஜையின் நல்ல நேரத்தில், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். துர்கா பூஜை பண்டிகை மூலம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பலப்படுத்தப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். நாட்டை … Read more

ஐசியூவில் முலாயம் சிங் யாதவ்… உ.பி முன்னாள் முதல்வர் கவலைக்கிடம்!

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இம்மாநிலத்தை மூன்று முறை ஆட்சி செய்தவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் ஒருமுறை கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்தது இல்லை. இவர் சமாஜ்வாதி கட்சி தலைவராகவும் விளங்குகிறார். உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி

டெல்லி: யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜக்ஜீவன் ராமுக்குப் … Read more

உ.பி: ஒருமணி நேரத்தில் இருவேறு விபத்துகள் – 31 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் இன்னும் பொதுமக்களை ஏற்றிச்செல்ல டிராக்டர்களை அதிகளவில் பயன்படுத்துகின்றது. இதனால், அடிக்கடி டிராக்டர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம்  கான்பூர் அருகே ஃபதேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்கு நேற்று மாலை சுமார் 50 பேர் டிராக்டரில் பயணித்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கதம்பூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து டிராக்டர் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் … Read more

ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளால் ‘டிராபிக்’ போலீசாக மாறிய டாக்டர்; நொய்டாவில் நெகிழ்ச்சி

நொய்டா: நொய்டா பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது பணி நேரம் போக மற்ற நேரத்தில் டிராப்பிக் போலீசை போன்று போக்குவரத்தை சரிசெய்து வருவதால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ெநாய்டா பகுதியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணா யாதவ் என்பவர், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ​​கடுமையான போக்கவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றைக் கண்டார். அந்த ஆம்புலன்சில் நோயாளி இருந்ததால், அவர் … Read more

பாத யாத்திரை.!தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்

சுமார் 3500 கி.மீ பாதயாத்திரையாக செல்லும் நடைபயணத்தை தொடங்கினார், தேர்தல் வியூகவாதியாக மாறிய அரசியல் ஆர்வலரான பிரசாந்த் கிஷோர். மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து மாநிலம் தழுவிய நடைபயணத்தை தொடங்கியுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன், அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்னைகளை கண்டறியும் நோக்கத்துடன், ‘ஜான்சுராஜ்’ பரப்புரையின் கீழ், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 3500 கி.மீ., நடக்க உள்ளார்பிரசாந்த் கிஷோர். 1917ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மகாத்மா காந்தி … Read more

அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; மகாராஷ்டிரா அரசு திடீர் உத்தரவு

மும்பை: அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது  ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், ெபாதுமக்களிடமிருந்து தொலைபேசி அல்லது செல்போன் அழைப்புகள் வந்தால், இனிமேல் … Read more

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணம் இதுதான்!

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள், பயனர்கள் அளித்த புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, பயனர்களிடம் … Read more

27 பக்தர்கள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்!

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு, கான்பூர் மாவட்டம், கதம்பூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 50 பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் ஏறி பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கான்பூர் பாஹாதுனா கிராமத்தின் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் குளத்தில் … Read more

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகை மார்ச் 2023 வரை நீட்டிப்பு; ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும், விலையைக் … Read more