ஐதராபாத்தில் 3 தீவிரவாதிகள் கைது: பாக். உளவு அமைப்புடன் தொடர்பு
திருமலை: ஐதராபாத்தில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு சதியை போலீசார் முறியடித்து, சதியில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 4 கையெறி குண்டுகள், ரூ.5.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மலக்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ஜாஹத். இவருக்கு கடந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக பல வழக்குகளில் தொடர்பு இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புகளுடன் மீண்டும் தனது தொடர்புகளை புதுப்பித்து குண்டுவெடிப்பு மற்றும் … Read more