படுக்கையறையில் கட்டுகட்டுக்காக ரூ.17.32 கோடி பணம் பதுக்கி வைப்பு.. தலைமறைவான தொழிலதிபரை தேடிவரும் அதிகாரிகள்..!

மேற்கு வங்கத்தில் சுமார் 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாகவுள்ள தொழிலதிபர் அமீர்கானை அமலாக்க துறையினர் தேடி வருகின்றனர்.  கடந்த 2021-ம் ஆண்டு, இ-நக்கட்ஸ் மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி செய்ததாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த 17 கோடியே 32 லட்சம் ரூபாய் பணத்தையும், பல முக்கிய ஆவணங்களையும் … Read more

2 மாதங்களாக மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை – பிரபல பள்ளியின் பியூன் கைது

மும்பையில் பிரபல பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 மாதங்களாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்த பியூன் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை கிராண்ட் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் பியூன் வேலைசெய்துவந்த 35 வயது நபர் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பில் பயிலும் 15 வயது மாணவியிடம் நட்பை வளர்த்துள்ளார். பின்னர் அதே நட்பை பயன்படுத்தி கடந்த ஜூலை மாதத்திலிருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கிறார். மேலும் … Read more

துவாரகா பீட சங்கராச்சாரியார் மறைந்தார்: பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா இரங்கல்

மத்தியப் பிரதேசம்: துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி இன்று காலமானார். அத்வைத ஆச்சாரியரான ஆதி சங்கரர் தோற்றுவித்த துவாரகா பீடத்தின் அதிபராக இருந்து வந்த ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி இன்று காலமானார். அவருக்கு வயது 99. மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூரில் உள்ள ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. மத்தியப் பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924ம் ஆண்டு பிறந்த இவர், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் … Read more

திருப்பதி லட்டு… சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்வீட் நியூஸ்!

திருப்பதி என்றாலே உடனே அனைவரின் நினைவுக்கும் வருவது அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்புடும் லட்டுதான். திருப்பதிக்கு ஆன்மிக யாத்திரை சென்று வருபவர்களிடம் சாமி தரிசனம் எப்படி இருந்தது என்று கேட்பவர்களைவி, எங்கே லட்டு என்று கேட்பவர்கள்தான். அந்த அளவுக்கு திருப்பதி லட்டு உலக அளவில் ஃபேமஸ். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு தலா ஒன்று எனும் வீதம் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் கூடுதல் லட்டு தேவைப்படுவோர் டோக்கன் … Read more

இரண்டு டீ குடித்த ராகுல் காந்தி – அதிகாலையில் சர்ப்ரைஸ் அடைந்த டீக்கடை சேட்டன்…

பாரத் ஜோடா யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

இந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டோம்.. சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், இந்தி நடிகர் சல்மான்கானை கொலை செய்ய நோட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கபில் பண்டிட் என்பவர் உள்ளிட்ட 23 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். கபில் பண்டிட்டிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாதா லாரன்ஸ் பிஸ்னோய் உத்தரவின்பேரில் சல்மான் கானை கொலை செய்யும் நோக்கில், மும்பையில் அவர் செல்லும் பகுதியில் தாமும், சச்சின் பிஸ்னோய் மற்றும் சந்தோஸ் … Read more

பூஜைப் பொருட்களை தொட்ட பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டிவைத்து அடுத்த கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் பூஜைபொருட்களை தொட்டதாக பட்டியலின சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் கோவில் ஒன்றில் நுழைந்து, அங்கிருந்த பூஜை பொருட்களை 11 வயது சிறுவன் தொட்டதாக கூறி அவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து அச்சிறுவனை இழுத்து வந்தவர்கள், கை மற்றும் கழுத்தை கயிறால் இறுக்கி, மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அச்சிறுவன் கதறி அழுவதையும் அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை. … Read more

குடியிருப்புவாசியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. நாயின் உரிமையாளரை கைது செய்த போலீசார்!

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் குடியிருப்புவாசியை பிட்புல் நாய் கடித்து குதறிய நிலையில், அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பிரேம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கும் சங்கல்ப் நிகாம் என்பவர் கடந்த 3ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் என்பவரின் செல்லப்பிராணியான பிட்புல் நாய் அவரை கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் செல்லப் பிராணியின் உரிமையாளர் மீது … Read more

வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம்: கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

கொல்கத்தா: வௌிநாடு தப்பிச் செல்ல முயன்ற மம்தாவின் உறவினரை கொல்கத்தா விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் உறவினரான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் மைத்துனி (மனைவியின் தங்கை) மேனகா கம்பீர் நேற்றிரவு பாங்காங் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் சென்றார். அவரை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்றிரவு 9.30 மணியளவில் பாங்காக் செல்லும் … Read more

7 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் மீது போக்சோ வழக்கு

ஹைதராபாத்தில் விடுதி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வார்டன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவிலுள்ள ஹயாத்நகர் பகுதியில் இயங்கிவருகிறது ஸ்ரீ சைதன்யா பள்ளி. அந்த பள்ளியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்தவர் முர்ராம் கிருஷ்ணா. 35 வயதான இவர் விடுதியில் தங்கியிருந்த ஏழு சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவலறிந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சண்டையிட்டுள்ளனர். உடனே ஹயாத்நகர் காவல் நிலையத்தில் வார்டன் கிருஷ்ணா மீது புகாரளிக்கப்பட்டது. அதனையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more