சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி

டெல்லி : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரயில்வே முறைகேடு வழக்கில் ஜாமீனிலுள்ள அவர் அக்.10-25 வரை சிங்கப்பூரில் சிகிச்சை பெற அனுமதி கோரியிருந்தார்.

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, … Read more

பஞ்சாப் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரி பகவந்த் மான் தீர்மானம் தாக்கல்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 117 இடங்கள் உள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 92, காங்கிரஸ் கட்சிக்கு 18, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 3, பாஜகவுக்கு 2, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ உள்ளனர். இந்நிலையில், தனது கட்சி எம்எல்ஏ-க்கள் 10 பேரிடம் தலா ரூ.25 கோடிக்கு பேரம் பேசி ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்கும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ முயற்சியில் பாஜக, ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதேபோன்ற குற்றச்சாட்டை … Read more

பி.எஃப்.ஐ கூடவே மாட்டிக் கொண்ட 8 அமைப்புகள்… ஆக்‌ஷனில் மத்திய அரசு!

கடந்த சில நாட்களாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்த செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடியான ரெய்டு, கைது நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்து கலவரங்கள் என அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பி.எஃப்.ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனுடன் தொடர்பில் இருக்கும் அல்லது சார்ந்து … Read more

ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டம்

டெல்லி : ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தடையை அடுத்த பி.எஃப்.ஐ. தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ!! 11 நாட்கள் தொடர் விடுமுறை..

டெல்லி ஐஐடி மாணவர்கள் இருவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் மீஷோ என்ற ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியை தொடங்கினர். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல ஷாப்பிங் நிறுவனங்கள் மத்தியில், சந்தையில் நுழைந்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது மீஷோ நிறுவனம். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத் தள்ளுபடி விற்பனை தணிந்தவுடன், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களுக்கும் 11 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. We’ve announced … Read more

'மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்' – கேரள சிபிஎம் கருத்து

திருவனந்தபுரம்: மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் … Read more

மைனர்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்

புதுடெல்லி: 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்திலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, வசதிகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 18 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,615 பேருக்கு கொரோனா… 22 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,615 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,79,088-ஆக உயர்ந்தது. * புதிதாக 22 பேர் … Read more

நாட்டிலேயே குறைவான விகிதம்… தமிழ்நாட்டில் தொடர் சரிவில் கருவுறுதல் விகிதம்!

தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்களில் மொத்த கருவுறுதல் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் ஆண்டுதோறும் மாதிரி பதிவு அறிக்கையை  வெளியிடுவது வழக்கம். கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிடும் இந்த அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 ஆக சரிந்துள்ளது. 2011 ல் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.8 ஆக இருந்தது. இதையடுத்து தற்போது நாட்டிலேயே மிகவும் குறைவான விகிதத்தை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. … Read more