சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; ‘ஸ்டைல் போஸ்’ கொடுத்த 2 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்: உத்தரபிரதேச காவல்துறை எச்சரிக்கை

லக்னோ: சமூக வலைதளம் மூலம் ஸ்டைல் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட 2 பெண் காவலர்களை உத்தரபிரதேச போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பெண் காவலர்கள் இருவர், சீருடை அணிந்தவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுமார் 15 வினாடிகள் ஓடக்கூடக் கூடிய அந்த வீடியோக்களை மாநில காவல் துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து போலீஸ் ஏடிஜி ராஜ்குமார், மேற்கண்ட இரண்டு பெண் … Read more

மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளில் பங்கேற்ற 19 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளில், மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 14 பேர் தண்ணீரில் மூழ்கியும், மற்ற 5 பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்துபோனது மதமும் தான்! – 75 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த உறவுகளின் நெகிழ்ச்சிக் கதை

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த சீக்கியர் அமர்ஜித் சிங். இவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த தனது தங்கை குல்சூம் அக்தரை சந்தித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அமர்ஜித்தும், அவரது சகோதரியும் மட்டும் இந்தியாவில் தொலைந்துவிட்டனர். அவரது முஸ்லிம் பெற்றோர் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். இது குறித்து குல்சூம் பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “1947-ல் ஜலந்தரில் உள்ள புறநகர்ப் பகுதிக்கு எனது அப்பாவும் … Read more

கூட்டுறவுத் துறை வளர்ச்சி: ஒன்றிணைந்து செயல்பட தீர்மானம்!

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை வழங்குவதற்கும், கூட்டுறவிலிருந்து செழிப்புக்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் பிரதமர் மோடி தலைமையில் புதிய கூட்டுறவு அமைச்சகம் 2021ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து, கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கூட்டுறவு அமைச்சகத்தால் மாநிலக் … Read more

ஆர்எஸ்எஸ் – எஸ்டிபிஐ மோதல்: கேரளாவில் தொடரும் குண்டுவெடிப்பு

கேராளவின் கண்ணூர் மாவட்டத்தில் சவ்வாசேரியில் வசித்து வருபவர் சுதீஷ். அங்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொண்டராக இவர் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், அவரின் வீட்டில் இருந்து 50 மீ. தூரத்தில் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்தவுடன், மட்டனூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்தில் … Read more

ஆடையில் மலம்கழித்த சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய ஆசிரியை! கர்நாடகாவில் கொடூரம்

ஆடையில் மலம்கழித்த 7 வயது சிறுவன்மீது ஆசிரியரே கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.  மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர் கண்டிப்பதுண்டு. ஆனால் சில ஆசிரியர்கள் அதையே தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு மாணவர்களை அடித்து துன்புறுத்தும் கொடூர செயல்களை குறித்து அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில் ஆடையிலேயே மலம் கழித்த 2ஆம் வகுப்பு மாணவன்மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார் கொடூர ஆசிரியர் ஒருவர். இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள … Read more

தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் தேவைப்படுகிறது: டெல்லி துணை முதல்வர் சிசோடியா

புதுடெல்லி: தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். அதனால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லியில் இன்று டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கல்வி சார்ந்த கொள்கைகளை 360 கோண பார்வையுடன் வடிவமைக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களுக்கான பயிற்சியையும் கருத்தில் கொண்டே கல்விக் கொள்கைகள் … Read more

நாடு 4 வது தொழிற்புரட்சியை நோக்கி முன்னேறிவருவதாக பிரதமர் மோடி புகழாரம்

நாடு நான்காவது தொழிற்புரட்சியை நோக்கி முன்னேறிவருவதாக, பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மத்திய-மாநில அரசுகள் பங்கேற்கும் இரண்டு நாள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2015 ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என குறிப்பிட்டார். இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறி வருகின்றனர் என்றும் நாம் முழு … Read more

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ624 கோடிக்கு மது விற்பனை..!

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் ரூ.624 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கேரளாவில் பிற மாநிலங்களை விட மதுகுடிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் இங்கு வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அதுவும் ஓணம் பண்டிகை காலத்தில் இந்த விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக ஓணப்பண்டிகை கொண்டாடப்படவில்லை. இதனால் மது விற்பனையும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஓணப்பண்டிகை … Read more

இந்தோ- பசிபிக் கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள்: மத்திய அமைச்சர் தகவல்!

லாஸ் ஏஞ்சல்சில் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) அமைச்சர்கள் நிலையிலான முதலாவது நேரடி கூட்டத்தில் மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர், “இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் விவாதிக்கப்படும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களின் அடிப்படையில் நம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும்” என்றார். இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் … Read more