புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி..!

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று 82 பேருக்கு பன்றிக்காய்ச்சல் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய … Read more

”வேற லெவல் படைப்பு; அந்த செல்லத்த பார்த்தே ஆகனும்” பட்டாசு பாலு போல ஆனந்த் மஹிந்திரா tweet

மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனரும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். புதுமையான கண்டுபிடிப்புகளை பகிர்ந்து அதனை பாராட்டுவதோடு, அந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அங்கீகரிக்கவும் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் தவறியதில்லை. அதன்படி அண்மையில் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ எட்டு லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டும் வியப்படையவும் செய்திருக்கிறது. மொபைலிட்டி என்ற சொல்லாடல் தற்போது மிகவும் பிரசித்தமாகியிருக்கிறது. … Read more

நாளை பஞ்சாப் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்துக்கு ஆளுநர் அனுமதி

சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மாநில அரசு தரப்பில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்த சட்டப்பேரவை செயலாளர் சுரேந்தர் பால் கடந்த 22-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு பதில் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். இதுதொடர்பாக முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆளுநர் வரம்பு மீறி … Read more

ராஜஸ்தானில் ஊசலாடும் காங்கிரஸ் – சச்சின் பைலட்டிற்கு எதிராக போர்க்கொடி!

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, சச்சின் பைலட்டை தேர்வு செய்யக் கூடாது என, முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், ராஜஸ்தான் … Read more

புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி தொடங்கினார். தனது புதிய கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார்

மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட செயற்கை கால்- இஸ்ரோ வடிவமைப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்ட செயற்கை காலை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. பல்வேறு ஏஜென்சிகளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கை காலை வணிக ரீதியாக தயாரிக்க முடிந்தால், தற்போதைய செலவில் பதினொன்றில் ஒரு பங்குக்கு விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக் காலைப் பயன்படுத்தி, மாற்றுத் திறனாளி ஒருவர் 100 மீட்டர் தூரம் சிரமமின்றி நடக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செயற்கை காலை தயாரிக்க 10 முதல் 60 லட்சம் … Read more

21 திரிணமூல் எம்எல்ஏக்களுடன் தொடர்பு: பாஜக பிரமுகர் மிதுன் சக்கரவர்த்தி பேச்சு

கொல்கத்தா: பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கூறியதாவது. மேற்குவங்கத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்தது போல எந்த மாற்றமுமின்றி ஆளும் திரிணமூல் கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களில் 38 பேர் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். அதில் 21 எம்எல்ஏ.க்கள் நேரடியாக பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். சிறிது காலம் பொறுமையுடன் இருங்கள். அதன் பிறகு எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து … Read more

இன்று மாலை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் செல்கிறார். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு டோக்கியோவில் உள்ள நிப்போன் புடோகான் அரினாவில் நடைபெறவுள்ளது.

₹20,000 சைக்கிளை ₹2,000க்கு விற்ற போதை ஆசாமி.. கையும் களவுமாக பிடித்த ஹரியானா போலீஸ்!

விநோதமான திருட்டு வழக்குகள் பற்றி தொடர்ந்து கேள்விப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உயர் ரக சைக்கிள்களாக பார்த்து திருடி அதனை இரண்டாயிரம், ஆயிரம் ரூபாய் என சொற்ப மதிப்புக்கு விற்று வந்த பலே திருடனை போலீசார் மடக்கிப்பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கைது செய்யப்பட்ட திருடனிடம் இருந்து கிட்டத்தட்ட 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்ட போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். கைதானவர் ரவிக்குமார் என்பதும் பஞ்ச்குலாவில் உள்ள மஜ்ரி கிராமத்தில்தான் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி … Read more