தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி கொலை செய்து தாயின் காலடியில் போட்ட மகன்

திருப்பதியில், தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் உள்ள அலிபுரம் பகுதியைச் சேர்ந்த சீனு, நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் தனது மகனிடம் கூறியதையடுத்து, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார். பின்னர், 30 அடி தூரத்திற்கு … Read more

`அட எழுந்துருச்சு ஓடிவாப்பா…’-நொய்டா கோபுர தகர்ப்பின்போது அசதியில் தூங்கியவரால் பரபரப்பு

நொய்டாவில் கட்டடம் இடிக்கப்பட்ட போது, அருகிலிருந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒருவர் அசதியில் வீட்டுக்குள்ளேயே தூங்கியிருந்திருக்கிறார். அவரை ஒருவழியாக போராடி எழுப்பி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் அதிகாரிகள். நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கட்டங்கள், இன்று கண் இமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்டன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அபேக்ஸ், சியான் என்ற பெயர்களில் குடியிருப்பு இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டதில் விதிமீறல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு கட்டடங்களையும் இடிக்க … Read more

காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடத்துவது என, காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 24ம் தேதி தொடங்குகிறது.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது என, கடந்த ஆண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த மாதம் 7ம் தேதி … Read more

’’மாட்டிறைச்சி சாப்பிட காதலி வற்புறுத்தினார்’’ – இளைஞரின் அதிர்ச்சி தற்கொலை குறிப்பு

தனது லிவ் – இன் பார்ட்னர் தன்னை மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்தியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் சிங்(27). இவர் உத்னாவின் படேல் நகரிலுள்ள தனது வீட்டில் ஜூன் 27ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது இறப்பிற்கு காரணம், அவரது லிவ் -இன் பார்ட்னர் சோனம் அலியும், … Read more

"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" – பிரதமர் மோடி

புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் … Read more

நொய்டாவில் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரம்..! – விரிவான வழக்கு விபரம்..!

விதிமுறைகளைமீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இந்த இரட்டை கோபுரத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோபுரங்களின் கட்டுமானத்தின்போது, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் விதிமுறை மீறப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது . தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. தோட்டத்துக்காக … Read more

தற்கொலை செய்ய முயன்ற பெண்- சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஓட்டுநர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அப்பெண்ணை ரயில் ஓட்டுநர் காப்பாற்றினார். சனிக்கிழமையன்று மும்பையின் பைக்குலா ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென அதன் முன் நின்றார். ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில், ரயிலின் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தி அதனை நிறுத்தினார். அப்போது, ஆர்.பி.எஃப். … Read more

”ராக்கெட்ரியில் பொய்களால் இஸ்ரோவை இழிவுப்படுத்தி இருக்கிறார் நம்பி” – முன்னாள் விஞ்ஞானிகள்

ஆர்.மாதவன் இயக்கத்தில் வெளியான ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணன் பற்றிய பொய்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை இழிவுப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர் மாதவன் எழுதி, தயாரித்து, இயக்கிய “ராக்கெட்ரி” திரைப்படம் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. திரைப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தை ஆர்.மாதவன் தான் ஏற்று நடித்து இருந்தார். இன்சாட் ராக்கெட் இஞ்சின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்ததில் இருந்தது கேரள உளவுத்துறை … Read more

2014 முதல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 8 ஆண்டில் எதிர்கட்சி ஆண்ட மாநிலங்களில் நடந்தது என்ன? 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல்

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல் நடப்பதால் பாஜக தனது வியூகங்களை வகுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் மத்தியில் … Read more

பறவை மீது ஏறி தப்பிய சாவர்க்கர்?; பள்ளி மாணவர்கள் ஷாக்!

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 1883ம் ஆண்டு பிறந்தவர் விநாயக தாமோதர் சாவர்க்கர். இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்ட வீரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து இருந்தாலும், 12 ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டார். இதன் பின்னணியில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது. அப்படி இருக்கையில், சாவர்க்கரை வீர புருஷனாக மாற்றும் முயற்சியை பாஜக கடந்த சில … Read more