சுரங்க ஒதுக்கீடு ஊழல் | தேர்தல் ஆணைய பரிந்துரையால் பதவி இழக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்?

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அம்மாநில புதிய முதல்வராக ஹேமந்த்தின் மனைவி கல்பனா சோரன் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுரங்க ஒதுக்கீட்டை முதல்வர் பெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அந்த கட்சி சார்பில் உச்ச … Read more

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் – அஷ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 5ஜி சேவை நாட்டின் அனைத்து பகுதியிலும் சென்றடைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று அவர் குறிப்பிட்டார். மலிவு விலையில் சேவை கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்த அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். Source link

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் தீவிரமாக களையெடுத்து வருவதால், அவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல்கள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, தீவிரவாத அமைப்புகளின் மீது பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் அதிகளவில் தீவிரவாதிகளை அனுப்ப முயற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் கமல்கோட் எல்லை பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை கண்ட வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில். … Read more

மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை

புதுடெல்லி: ‘மக்களின் உணர்வுகளை புரிந்து சேவை செய்ய வேண்டும்,’ என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். ஒன்றிய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2020ம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர். அவர்களடையே முர்மு பேசியதாவது: அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தங்களின் துறையில் நாட்டை முதலாவது இடத்துக்கு கொண்டு வரும் ஆர்வத்துடன் … Read more

தாய்க்கு விஷம் வைத்து கொன்ற மகள்…- காவல் துறை விசாரணையில் அதிர்ச்சி..!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் சொத்துப் பிரச்சனை நடந்த வண்ணம் உள்ளது. இதில் சில இடங்களில் தகராரில் முடியும். ஆனால் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்து கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி – சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு இந்துலேகா என்ற மகளுக்கு மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் … Read more

இந்தியாவை அச்சுறுத்திய சீன உளவு கப்பல் ருக்மணி இருக்கு… கவலை எதுக்கு… சதியை முறியடித்த செயற்கைகோள்கள்

புதுடெல்லி: இலங்கையின் அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்த சீன உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, ஒரு வாரத்துக்கு பிறகு கடந்த 22ம் தேதி புறப்பட்டு சென்றது. இது, இலங்கையில் இருந்தபோது தென் இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள், ஏவுகணைகள் இருப்பிடங்கள், அணுமின் நிலையங்களின் செயல்பாடுகளை உளவு பார்க்கும் என்று பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த கப்பலின் உளவு முயற்சியை இந்திய செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இந்திய பெருங்கடலில் வெளிநாட்டு ராணுவங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஜிசாட் – … Read more

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு -குஜராத், மத்திய அரசுக்கு நோட்டீஸ்

குஜராத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா வன்முறைச் சம்பவத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை நன்னடத்தை அடிப்படையில், சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நாடு … Read more

என்னது 800 கோடிக்கு பேரமா? – ரொம்ப காஸ்ட்லியான லோட்டஸ் ஆபரேஷனா இருக்கும் போல!

எதிர்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஆளுங்கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, அவர்களை தங்கள் பக்கம் இழுத்து, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசமாக்கும் ஆபரேஷன் லோட்டஸ் எனும் தந்திரம் பாஜகவுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. இந்த தந்திர வழியை பயன்படுத்தி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்த்து, தங்களின் சொல் பேச்சை கேட்கும் அதே கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை அண்மையில் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து … Read more

ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுங்கச்சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான ராஞ்சியை சேர்ந்த தொழிலதிபர் பிரேம் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 11 இடங்களில் ஒன்றிய அமலாக்க துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள், முக்கிய ஆவணங்களை தேடி சென்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு … Read more

பாலியல் வன்கொடுமையால் பிறந்த மகனாலேயே 28 ஆண்டுக்கு பிறகு தாய்க்கு கிடைத்த நீதி!

சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அதனால் பிறந்த மகனாலேயே 28 வருடங்களுக்குப் பிறகு அப்பெண்ணுக்கு நீதி கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியை சேர்ந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு அவரது 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமியை, வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் முகமது ரஜி என்ற குட்டு ஹாசன் மற்றும் நாக்கி ஹாசன் என்ற இரு … Read more