`கூட்டம் அலைமோதுகிறது… பக்தர்கள் யாத்திரையை ஒத்திவைக்கவும்’- திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களின் யாத்திரையை ஒத்திவைக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் யாத்திரையை ஒத்திவைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதியில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். எனவே மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வருவோர் அக்டோபர் 17க்கு பிறகு வருமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.Source : … Read more

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் 2 மாதங்கள் இடைவெளியில் அவருக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை மிதமான அறிகுறிகளே இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியிருந்தார். தற்போது … Read more

வாக்குரிமை பறிபோகும் அபாயம் – அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த எட்டு ஆண்டுகளில் பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது. சில மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலங்களில் செல்வாக்கு மிக்க பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வரும் வேலையை பாஜக செய்துவருவதால் முக்கிய கட்சிகள் பாஜகவுக்கு எதிராக பேசிவருகின்றன. பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி காங்கிரஸ், ஆர்ஜேடி ஆதரவுடன் மீண்டும் இன்று ஆட்சியமைக்கிறது. இந்த சூழலில் உத்தரபிரதேச … Read more

விரைவில் மற்றொரு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் – விண்வெளி ஆணையக் குழு!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மற்றொரு எஸ்எஸ்எல்வி ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என விண்வெளி ஆணையக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்துள்ளார். எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வியடையவில்லை என்றும் அது வெறும் பின்னடைவுதான் என்றும் கூறினார். விரைவில் அடுத்தகட்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறிய அவர், இன்றைய நாள்களில் செயற்கைக்கோள்கள் மிகவும் சிறியதாக உருவாக்கப்பட்டு வருவதால், அதன் வரிசையில் எஸ்எஸ்எல்வி முக்கிய இடம் வகிக்கிறது என்றார். Source link

இனி மூத்தவழக்கறிஞர்கள் மென்சனிங் எனப்படும் வழக்கு முறையீட்டை செய்ய அனுமதியில்லை.: உச்சநீதிமன்றம்

டெல்லி: இனி மூத்த வழக்கறிஞர்கள் மென்சனிங் எனப்படும் வழக்கு முறையீட்டை செய்ய அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்க, பட்டியலிட கோருவது பற்றி  மூத்த வழக்கறிஞர்கள் முறையிட்டு வந்தனர்.

'நம்பிக்கை துரோகம் பாஜகவுக்கு பழக்கமில்லை' – ப.சிதம்பரத்தின் வஞ்சப்புகழ்ச்சி ட்வீட்

நம்பிக்கை துரோகம் பாஜகவுக்கு பழக்கமில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பிஹார் அரசியலில் புதிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோத்துள்ளார். இந்நிலையில், பாஜகவின் அரசியல் முறையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழ்வது போல் இகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக எப்போதும் மக்களை வஞ்சிப்பதில்லை. நம்பிக்கை துரோகம் பாஜகவுக்கு பழக்கமில்லை. … Read more

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று..!!

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதும், பின்பு குறைவதும் இயல்பாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 4,41,90,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலானோர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு … Read more

ஆர்ஜேடியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் – இன்று மாலை பதவியேற்பு; துணை முதல்வராகிறார் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 16,047 பேருக்கு கொரோனா… 54 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 16,047 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,41,90,697ஆக உயர்ந்தது.* புதிதாக 54 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை – எங்கு தெரியுமா?

இந்தியாவில் முதல்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதை  இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. கொல்கத்தாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆறு வழியே இந்த மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மெட்ரோ பாதையின் நீளம் 16.55  கிலோ மீட்டர். 9.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் … Read more